
ஜெர்மனியின் சாக்சனி பகுதியில் உள்ள கிழக்கு தாது மலைகளில் (Eastern Ore Mountains) தண்டனையாகக் கூறி, 8 வயது சிறுவன் ஒருவனைத் தாயொருவர் உறைபனியில் நிர்வாணமாக இறக்கிவிட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
41 வயதான Susann S. என்ற ஒற்றைத் தாய், 2025 நவம்பர் 30, அன்று தனது மகனுடன் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தைத் தொடர்ந்து காரில் அழைத்துச் சென்று இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளார். அரசு தரப்பு வழக்கறிஞர் அலுவலகத்தின் தகவபடி, மகனை இருண்ட காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்ற தாய், அவனை ஆடைகளைக் கழற்றிவிட்டு இறங்குமாறு உத்தரவிட்டுள்ளார். வெப்பநிலை பூஜ்யம் டிகிரியாகக் குறைந்திருந்த அந்த உறைபனிக் காட்டில் சிறுவனைத் தனியாகத் தவிக்கவிட்டுவிட்டு அவர் காரை இயக்கிக்கொண்டு சென்றுள்ளார்.
தப்பிக்க முயன்ற அச்ச சிறுவன் நகரும் காரின் கதவுப்பிடியைப் பிடித்துள்ளார். எனினும் பிடி நழுவி பனி சாலையில் விழுந்ததில் அவனது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் சிறுவனைத் திரும்ப அழைத்துச் சென்றுள்ள தாய், அவனுக்கு வலியைக் குறைக்க மருத்துவ உதவியை நாடியுள்ளார். இந்த கொடூர சம்பவத்தால் சிறுவனுக்கு மூளையில் காயம், சிராய்ப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டதுடன், நினைவாற்றல் இழப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் அவன் நான்கு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியிருந்தது. தற்போது அந்தப் பையன் சாக்சனியில் உள்ள குழந்தைகள் இல்லத்தில் வசித்து வருகிறார்.
குழந்தை பராமரிப்புப் பணியாளரான Susann, Dippoldiswalde மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது கண்ணீர் விட்டு அழுதார். தனது செயல் “ஒரு முறை மட்டுமே நிகழ்ந்த விதிவிலக்கான சூழ்நிலை” என்றும், “நான் எப்போதுமே என் குழந்தைக்குத் தீங்கிழைக்க விரும்பியதில்லை” என்றும் அவர் வாதிட்டார். குழந்தை தன்னிடம் இல்லை என்பதே தமக்கு மிகப்பெரிய தண்டனை என்பதால் நீதிமன்றம் தனக்குச் சிறைத் தண்டனை வழங்க வேண்டாம் என்று அவர் கோரினார்.
எனினும், நீதிபதி Xaver Seitz மற்றும் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, சிறுவனைத் தனியாகக் காட்டில் கைவிட்ட செயல் “மன்னிக்க முடியாத குற்றம்” என்று கூறி அவருக்கு 9 மாத காலச் சிறைத் தண்டனையை விதித்ததுடன், அதனைச் சஸ்பெண்ட் செய்தும் உத்தரவிட்டனர்.

