Last Updated:
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விலை கொடுத்து அதாவது 27 கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட வீரராக லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பந்த் உள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 61வது லீக் ஆட்டமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மோதும் போட்டி லக்னோவில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் தோல்வி அடைந்தால் லக்னோ அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியாமல் தொடரில் இருந்து வெளியேறிவிடும். ஏற்கனவே வெளியேறியுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இந்த போட்டி ஆறுதல் வெற்றி பெறும் மேட்ச்சாக தான் அமையும்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இன்னும் ஒரே ஒரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் நிலையில் அந்த இடத்துக்கு மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
மும்பை அணி மற்றும் டெல்லி ஆகியவை தலா 12 போட்டிகளில் விளையாடி மும்பை 14 புள்ளிகளும் டெல்லி 13 புள்ளிகளும் பெற்றுள்ளன. லக்னோ அணி 11 போட்டிகளில் விளையாடி 10 புள்ளிகளை பெற்றுள்ளது. அடுத்த 2 போட்டிகளில் மும்பை வெற்றி பெற்றால் 18 புள்ளிகளுடன் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விடும்.
இந்த சூழலில் ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைப்பதற்கு லக்னோ அணி இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விலை கொடுத்து அதாவது 27 கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட வீரராக லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பந்த் உள்ளார்.
அவர் கேப்டன்ஷிப்பிலும் பேட்டிங்கிலும் மோசமான திறமையை வெளிப்படுத்தி வருவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அடுத்து வரும் 3 போட்டிகளிலும் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதால் இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு விறுவிறுப்பானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


