• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

“ப்ரோ கபடி லீக்கின் புதிய விதிகள் சுவாரஸ்யமாக உள்ளன” – தமிழ் தலைவாஸ் கேப்டன் பவன் ஷேரிங்க்ஸ்! | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
September 2, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
“ப்ரோ கபடி லீக்கின் புதிய விதிகள் சுவாரஸ்யமாக உள்ளன” – தமிழ் தலைவாஸ் கேப்டன் பவன் ஷேரிங்க்ஸ்! | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜியோஸ்டார் நடத்திய ‘மீடியா டே’ நிகழ்வில் பேசிய தமிழ் தலைவாஸ் கேப்டன் பவன் சேஹ்ராவத், இந்த சீசன் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்தார். குறிப்பாக, கோல்டன் ரெய்டு மற்றும் டை-பிரேக்கர் போன்ற ப்ரோ கபடி விதி மாற்றங்களைப் பற்றி விரிவாகப் பேசினார். புதிய விதிகள் குறித்து பவன் சேஹ்ராவத் கூறுகையில், “டை-பிரேக்கர் விதி மிகவும் சுவாரஸ்யமானதும், விளையாட்டுக்கு நல்லதுமாக உள்ளது. இது உங்கள் திறன்களைக் கூர்மையாக்கவும், முன்னணியில் விளையாடவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இந்த புதிய விதியால், ஐந்து ரெய்டர்களுடன் மைதானத்தில் இருக்கும் அணி சிறப்பாகச் செயல்படுகிறது.

எந்த வீரர் அணியில் இருந்து முன்னேறி விளையாடுகிறார் என்பதைப் பார்க்க மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். இந்த விதி மாற்றங்கள் சமனில் முடிக்காமல், ஒரு ‘டூ-அர்-டை’ அணுகுமுறையை ஊக்குவிக்கின்றன. இது ப்ரோ கபடிக்கு ஒரு நேர்மையான முன்னேற்றம். எனக்கு இந்த விதிகள் மிகவும் சுவாரஸ்யமாகத் தோன்றுகின்றன, மேலும் ரசிகர்களும் எளிதாகப் புரிந்துகொள்கிறார்கள்.” என்றார்.

அதேபோல், அணியின் அமைப்பு குறித்துப் பேசுகையில், “காகிதத்தில் பார்க்கும்போது ஒருவரும் முக்கிய ரெய்டராக இல்லை. ஆனால் கேப்டனாகவும் மூத்த வீரராகவும், எந்த வீரர் எந்த நிலையில் சிறப்பாகச் செயல்படுவார் என்பதை நான் கவனிக்க வேண்டும். உதாரணமாக, அர்ஜுன் தேஷ்வால் ஒரு குறிப்பிட்ட டிஃபென்ஸுக்கு எதிராக அதிக புள்ளிகள் எடுக்க முடியும் என்று நான் நினைத்தால், அவரை அனுப்புவது என் கடமை. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பங்கு உள்ளது. மேலும் அர்ஜுன் தனது பங்கினை சிறப்பாகச் செய்கிறார். இந்த சீசனில் ஒரே முக்கிய ரெய்டர் இல்லை. அணியின் தேவைக்கு ஏற்ப செயல்படுத்துவதே முக்கியம்.” என பவன் சேஹ்ராவத் கூறினார்.

சீசனுக்கான தயாராகும் முறை குறித்துப் பேசிய அவர், “ஒவ்வொரு சீசனும் தானாகவே மாற்றங்கள் நடக்கின்றன. பெரிய மாற்றங்கள் தேவையில்லை. உங்கள் திறன்களை மேம்படுத்தி, உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கடமையை நிறைவேற்ற வேண்டும். தற்போது, நான் எனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை 100% செய்கிறேன். மாற்றங்கள் தொடர்ந்து நடக்கும், ஏனெனில் சீசன் 3-ல் விளையாடிய பவன், சீசன் 12-ல் விளையாடும் பவனைப் போல இல்லை. புதிய வீரர்களுடன் பயிற்சி செய்வதால் புதிய திறன்களைக் கற்றுக் கொள்கிறீர்கள். அதில் நிறையக் கற்றுக் கொள்ள முடியும். திறன்கள் தானாகவே வளர்கின்றன; நீங்கள் அவற்றை மேம்படுத்தினால் போதும். அதை நான் செய்து கொண்டிருக்கிறேன்.” எனத் தெரிவித்தார்.

மற்ற அணிகள் பேசிய பவன் சேஹ்ராவத், “எனக்குப் பிற அணிகள் அனைத்தும் ஒன்றே. ஒவ்வொரு போட்டியும் சவாலானதே. குறிப்பிட்ட ஒரு அணி மட்டும் பலமாக உள்ளது என்பது இல்லை. எல்லா அணிகளும் சிறப்பாக விளையாடுகின்றன. நாங்கள் அதற்கேற்றாற்போல் திட்டமிட்டு விளையாடுவோம். அவர்களின் பலவீனங்களைப் படிப்போம். எங்களுடையவற்றையும் சரிசெய்வோம். எங்களிடம் வலுவான டிஃபென்ஸ் மற்றும் வலுவான ஆப்ஃபென்ஸ் உள்ளது. திட்டத்திற்கேற்ப டிஃபென்ஸ் அல்லது அட்டாக் பயன்படுத்துவோம். அணிக் கூட்டத்தில் அதை விவாதித்து, பிறகு செயல்படுத்துவோம்.” எனக் கூறினார்.

இதற்கிடையே, இன்று இரவு 8:00 மணிக்கு டபாங் டெல்லி K.C., பெங்களூரு புல்ஸ் அணியைச் சந்திக்கிறது. அதனைத் தொடர்ந்து, இரவு 9:00 மணிக்கு ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் vs பட்னா பைரட்ஸ் மோதல், JioHotstar மற்றும் Star Sports நெட்வொர்க்-இல் நேரடியாகவும், பிரத்யேகமாகவும் ஒளிபரப்பாகிறது. ப்ரோ கபடி லீக் ஆக்‌ஷனை இன்று தவறாமல் காணுங்கள்!.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

September 02, 2025 7:20 PM IST

Read More

Previous Post

“செப்டம்பர் 4ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம்..” பிரதமரின் தாயை இழிவாகப் பேசியதைக் கண்டித்து என்டிஏ அறிவிப்பு | இந்தியா

Next Post

ஃபிக்ஸட் டிபாசிட்டுக்கு அதிக வட்டியை வழங்கும் சிறுநிதி வங்கிகள்…!

Next Post
ஃபிக்ஸட் டிபாசிட்டுக்கு அதிக வட்டியை வழங்கும் சிறுநிதி வங்கிகள்…!

ஃபிக்ஸட் டிபாசிட்டுக்கு அதிக வட்டியை வழங்கும் சிறுநிதி வங்கிகள்...!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin