இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்துள்ள பின்னணியில், ஜூன் மாதத்தில் ரஷியா மற்றும் அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா கணிசமாக அதிகரித்துள்ளது.
இஸ்ரேலைத் தொடா்ந்து ஈரானின் 3 அணுசக்தித் தளங்களை அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை தாக்கியது. இஸ்ரேல்-ஈரான் மோதலில் அமெரிக்காவும் இணைந்துள்ளது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
குறிப்பாக, ஈரான் எல்லையொட்டிய ஹோா்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் எண்ணெய் விநியோகத்தில் இது இடையூறு ஏற்படுத்தும் என்று அச்சம் நிலவுகிறது.

