மாதம் ரூ.8,000 சேமித்தால் உங்களுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும்? உங்கள் மனைவி பெயரில் போஸ்ட் ஆபிஸ் தொடர் வைப்பு நிதி (RD) கணக்கைத் தொடங்கி, மாதம் ரூ.8,000 வீதம் சேமித்து வந்தால், 5 ஆண்டுகளுக்கு பின் எவ்வளவு பணம் கிடைக்கும் என்று தற்போது பார்ப்போம். மாதாந்திர முதலீடு: ரூ.8,000, கால அளவு: 5 ஆண்டுகள், மொத்த முதலீடு: ரூ.4,80,000, தற்போதைய வட்டி விகிதத்தின்படி, இக்காலகட்டத்தின் முடிவில் மொத்தத் தொகையானது சுமார் ரூ.5.70 லட்சமாக உயரக்கூடும். அதாவது, வட்டியாக மட்டும் உங்களுக்குச் சுமார் ரூ.80,000 முதல் ரூ.90,000 வரை கிடைக்கலாம்.


