அதுமட்டுமின்றி, மூத்த குடிமக்களுக்கு நிலையான வைப்புத் தொகைக்கு வங்கிகள் அதிக வட்டி வழங்குவதில்லை. தபால் நிலையத்தின் பொதுத் திட்டங்களிலும் அத்தகைய முறை இல்லை. அதாவது, பொது சேமிப்புக் கணக்குகள், RD, நேர வைப்புத்தொகை (TD), மாதாந்திர வருமானத் திட்டம் (MIS), PPF மற்றும் கிசான் விகாஸ் பத்திரத் திட்டங்களில், ஆண்கள், பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் என அனைவருக்கும் வட்டி விகிதம் ஒன்று தான்.


