கோலாலம்பூர்:
கடந்த 2024ஆம் ஆண்டுக்கான மலேசிய போலீஸ் படையின் வீர விருது பெற்றவர்கள் பட்டியலில் ஜோகூர் போலீஸ் தலைவர் டத்தோ குமார் முத்துவேலு முதலிடம் வகித்தார்.


கோலாலம்பூரிலுள்ள போலீஸ் பயிற்சி நிலையத்தில் டான்ஸ்ரீ அப்துல் ரஹ்மான் ஹஷிம் மண்டபத்தில் இந்த விருதளிப்பு நிகழ்ச்சி நடந்தேறியது.
இதற்கு உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தலைமை ஏற்றார்.


போலீஸ் படையினரின் தியாகத்திற்கும் சேவைக்கும் அரசாங்கம் அளிக்கும் ஓர் அங்கீகாரமாக இந்த விருதளிப்பு அமைகிறது.


டத்தோ குமாருடன் ஜோகூர் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத்துறை தலைவர் ஏசிபி முகமட் அப் நிஸான் பின் யாஹ்யா, மூவார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரைஸ் முக்லிஸ் பின் அஸ்மான் அஜிஸ், இஸ்கண்டார் புத்ரி போலீஸ் தலைவர் ஏசிபி குமரேசன் த/பெ முனியாண்டி, குளுவாங் போலீஸ் தலைவர் பஹ்ரின் பின் முகமட் நோர், ஜோகூர் சிறப்பு பிரிவு துணைத் தலைவர் ஏசிபி நூர் இம்ரான் பின் அப்துல் ரஹ்மான், ஜோகூர் குற்றப் புலனாய்வுத் துணைத் தலைவர் ஏசிபி முகமட் ஜைரி பின் பட்ரோல், ஜோகூர் குற்றப்புலனாய்வுத் துறை (சட்டம்) துணைத் தலைவர் ஏசிபி ஜுனைனா பிந்தி எம்.கஸ்போலா ஆகியோரும் ஜோகூர் போலீஸ் தலைமையகத்தின் மூத்த அதிகாரிகள் ஐந்து பேரும் போலீஸ் அதிகாரிகள் 12 பேரும் இந்த வீர விருதுகளைப் பெற்றனர்.


