Last Updated:
போலி வாக்காளர்களைக் கண்டறியும் மென்பொருள் பயனற்றது என தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.
போலி வாக்காளர்களைக் கண்டறியும் மென்பொருள் கைவிடப்பட்டதாகத் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்துள்ளது.
100 சதவிகிதம் உண்மையான வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்காக இந்த மென்பொருளைப் பயன்படுத்தப் போவதாக 2023 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. நாடு முழுவதும் இந்தச் செயலி செயல்படுத்தப்படும் என்றும் கூறியிருந்தது.
இந்த நிலையில், பிகார் வழக்கு ஒன்றில் ஆஜராகி பதிலளித்த தேர்தல் ஆணையம், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக உள்ளவர்களைக் கண்டறியும் மென்பொருள் பயனற்றது என்றும் அதனைப் பயன்படுத்துவது கைவிடப்பட்டதாகவும் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதனைப் பயன்படுத்துவதில்லை என்றும் கூறியுள்ளது.
இதனிடையே, தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், இதுவரை தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 99.95 சதவிகித வாக்காளர்களுக்கு எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மொத்தமுள்ள படிவங்களில் சுமார் 98.7 சதவிகித படிவங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் 6 கோடியே 36 லட்சம் எஸ்ஐஆர் படிவங்கள் கணினியில் பதிவேற்றப்பட்டதன் மூலம் 99 புள்ளி 27 சதவீத படிவங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
December 08, 2025 10:16 PM IST
போலி வாக்காளர்களைக் கண்டறியும் மென்பொருள்… உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் எழுத்துப்பூர்வ பதில்


