• Login
Monday, September 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

போலி முத்திரையுடன் தயாரிக்கப்பட்ட 8,500 குடிநீர் போத்தல்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவு – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
September 7, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
போலி முத்திரையுடன் தயாரிக்கப்பட்ட 8,500 குடிநீர் போத்தல்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவு – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
போலி முத்திரையுடன் தயாரிக்கப்பட்ட 8,500 குடிநீர் போத்தல்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவு

அவிசாவளையில் போலி SLS முத்திரையுடன் தயாரிக்கப்பட்ட 8,500 இற்கும் மேற்பட்ட குடிநீர் போத்தல்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், நிறுவனத்துக்கு அபராதமும் விதித்துள்ளது.

போலியான இலங்கைத் தரக்கட்டளை (SLS) முத்திரை மற்றும் அங்கீகரிக்கப்படாத வர்த்தக நாமத்தைப் பயன்படுத்தி போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீரைத் தயாரித்து விநியோகித்த அவிசாவளை, சீதாவக்கைப் பகுதியிலுள்ள நிறுவனம் ஒன்றுக்கும் அதன் பணிப்பாளருக்கும் எதிராகப் பாவனையாளர் விவகார அதிகார சபை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.

சுகாதார அமைச்சால் அங்கீகரிக்கப்பட்ட ‘லங்கா பிரீமியம்’ (Lanka Premium) என்ற பெயருக்குப் பதிலாக, ‘அக்வாச்சில்’ (Aquachill) என்ற பெயரில் லேபிளிடப்பட்டுத் தயாரிக்கப்பட்ட 8,500 இற்கும் மேற்பட்ட குடிநீர் போத்தல்களைப் பாவனையாளர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் கடந்த ஓகஸ்ட் 21ஆம் திகதி மேற்கொண்ட திடீர் சோதனையின்போது கைப்பற்றினர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கையிருப்பில் 19 லீற்றர், 5 லீற்றர், 1,500 மில்லி லீற்றர், 1,000 மில்லி லீற்றர் மற்றும் 500 மில்லி லீற்றர் கொள்ளளவு கொண்ட பல்வேறு அளவிலான போத்தல்கள் அடங்கியிருந்தன.

இச்சம்பவம் தொடர்பான வழக்கு, அவிசாவளை நீதவான் நீதிமன்றில் செப்டம்பர் 04ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதிகள் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டனர். 

இதனைத் தொடர்ந்து குறித்த நிறுவனத்திற்கும் அதன் பணிப்பாளருக்கும் 40,000 ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம், வழக்கின் சான்றுப் பொருட்களாக முன்னிலைப்படுத்தப்பட்ட அனைத்து குடிநீர் போத்தல்களையும் அழிக்குமாறு உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, கைப்பற்றப்பட்ட போத்தல்கள் அனைத்தும் நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே அழிக்கப்பட்டன.

போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீரைக் கொள்வனவு செய்யும்போது சரியான வர்த்தக நாமம், உற்பத்தித் திகதி, காலாவதியாகும் திகதி மற்றும் உத்தியோகபூர்வ SLS தரச் சான்றிதழ் முத்திரை ஆகியவற்றைச் சரிபார்த்து வாங்குமாறு பாவனையாளர்களைப் பாவனையாளர் விவகார அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது. 

மேலும், இவ்வாறான மோசடியான அல்லது சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் ஏதேனும் இருப்பின், 1977 என்ற துரித இலக்கத்தின் ஊடாகத் தமக்கு அறிவிக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

மருத்துவமனைகளில் நடைபெறும் பாலியல் தொல்லை மற்றும் கொடுமைப்படுத்துதல் தொடர்பான புகார்களை விசாரிக்க காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் – மலேசிய மருத்துவ சங்கம் – Malaysiakini

Next Post

புதிதாகப் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு ஒரு வாரத்துக்குள் இலக்கத் தகடுகள் – Sri Lanka Tamil News

Next Post
புதிதாகப் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு ஒரு வாரத்துக்குள் இலக்கத் தகடுகள் – Sri Lanka Tamil News

புதிதாகப் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு ஒரு வாரத்துக்குள் இலக்கத் தகடுகள் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin