Last Updated:
சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களை சரிபார்த்து மக்களுக்கு உண்மையை தெரிவிக்கும் நோக்கில் இந்திய ரயில்வேயானது புதிய கணக்கு ஒன்றை எக்ஸ் பக்கத்தில் திறந்துள்ளது.
இந்திய ரயில்வே குறித்து இணையத்தில் பரவும் தவறான தகவல்கள் மற்றும் போலியான வீடியோக்களை எதிர்கொள்ள மற்றும் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் நோக்கில் ரயில்வே அமைச்சகம் கடந்த புதன்கிழமை தனது அதிகாரப்பூர்வ உண்மை சரிபார்ப்பு கணக்கை (@IRFactCheck) எக்ஸ் தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த முயற்சி, குறிப்பாக ஏஐ மூலமாக உருவாக்கப்பட்ட அல்லது பழைய காட்சிகளைப் பயன்படுத்தி பகிரப்படும் தவறான வீடியோக்களின் எண்ணிக்கையை அதிகரித்து வரும்நிலையில், அதன் உண்மைத் தன்மையை மக்களுக்கு விளக்கும் நோக்கிலும், சமூக ஊடகங்களில் வேகமாக பரவும் வதந்திகளை உடனடியாக சரிசெய்து, பொதுமக்களிடையே நம்பகத்தன்மையைப் பாதுகாக்கும் முயற்சியாகவும் இந்த பக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
Introducing @IRFactCheck — the official handle of Indian Railways to counter misinformation.
If you come across any misleading or false content about Railways, tag @IRFactCheck to help us keep the facts on track.
Follow, stay informed, and share responsibly. ✅— Ministry of Railways (@RailMinIndia) October 22, 2025
இது குறித்து, ரயில்வே அமைச்சகம் தனது அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “தவறான தகவல்களை எதிர்கொள்ள இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ பக்கமான @IRFactCheck-ஐ அறிமுகப்படுத்துகிறோம். ரயில்வே குறித்த ஏதேனும் தவறான அல்லது தவறாக வழிநடத்தும் தகவல்களை நீங்கள் கண்டால், அது குறித்த உண்மையை சரிபார்க்க @IRFactCheck-ஐ டேக் செய்யவும், பின்தொடரவும், தகவல் அறிந்திருக்கவும், பொறுப்புடன் பகிரவும்” என்று குறிப்பிட்டுள்ளது.
இணையத்தில் பரவும் சில பழைய வீடியோக்கள், குறிப்பாக பீகாரைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேர்தல் காலத்தில் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியதாக ரயில்வே தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி, சமீபத்தில் பீகார் நோக்கி செல்கின்ற ரயில்களில் நெரிசல் மற்றும் வசதி குறைபாடு இருப்பதாகக் கூறி சில வீடியோக்களை பகிர்ந்தது. இதையடுத்து, அவை பழைய காட்சிகள் என ரயில்வே அமைச்சகத்தின் உண்மை சரிபார்ப்புப் பிரிவு மறுத்தது.
மேலும், “பழைய காட்சிகளைப் பகிர்ந்து, ரயில் பயணிகளைக் குழப்ப வேண்டாம்” என்றும் @IRFactCheck தனது பதிலில் தெரிவித்துள்ளது. அதேபோல், காங்கிரஸ் கட்சி 12,000 சிறப்பு ரயில்களை இயக்கும் ரயில்வே அறிவிப்பை கேலி செய்து, பழைய கூட்ட நெரிசல் காட்சிகளைக் காட்டும் மற்றொரு வீடியோவையும் பகிர்ந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, ரயில்வே அமைச்சகம் உண்மையான சிறப்பு ரயில்களின் பட்டியலை இணைத்து, தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என காங்கிரஸ் கட்சியை எச்சரித்தது.
This post is misleading. Avoid circulating outdated or distorted information that misrepresents the ongoing efforts of Indian Railways. Please refrain from such attempts to malign the reputation of the organisation or undermine the tireless service of over 12 lakh Railway… https://t.co/cSkfky5jTU pic.twitter.com/VHjt2zZxUS
— Ministry of Railways (@RailMinIndia) October 21, 2025
இந்திய ரயில்வேயின் இந்த புதிய @IRFactCheck முயற்சி, அரசாங்க அமைப்புகள் தவறான தகவல் மற்றும் போலி செய்திகளை நேரடியாக எதிர்கொள்வதற்கான ஒரு முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது.
October 24, 2025 3:41 PM IST
போலி தகவல்களுக்கு எதிரான புதிய ஆயுதம்…! அதிகாரப்பூர்வ உண்மை சரிபார்ப்பு பக்கத்தை தொடங்கிய இந்திய ரயில்வே…


