Last Updated:
மோசடி இமெயில் சம்பந்தப்பட்ட ஒரு ஸ்கிரீன் ஷாட்டையும் PIB பகிர்ந்துள்ளது. அதில், “e-PAN கார்டை ஆன்லைனில் டவுன்லோட் செய்வதற்கான படிப்படியான வழிகாட்டுதல். வருமானவரி துறை விவரமான தனிநபர் தகவல் குறித்து இமெயில் மூலமாக எந்த ஒரு கோரிக்கையும் எழுப்புவது கிடையாது என்பதை உறுதி செய்தது.”
e-PAN கார்டு டவுன்லோட் செய்யுமாறு மக்களைக் கோரும் போலி இமெயில்களுக்கு எதிராக பொதுமக்களை எச்சரிப்பதற்காக வருமான வரித்துறை ஒரு உண்மை சரிபார்ப்பை வெளியிட்டுள்ளது என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பிரஸ் இன்ஃபர்மேஷன் பியூரோ (PIB) உடன் வெளியிடப்பட்ட அந்த உண்மை சரிபார்ப்பில், “e-PAN கார்டுகளை டவுன்லோட் செய்ய கூறிவரும் போலியான இமெயில்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்” என்று கூறப்பட்டிருந்தது.
அதுமட்டுமல்லாமல் அந்த மோசடி இமெயில் சம்பந்தப்பட்ட ஒரு ஸ்கிரீன் ஷாட்டையும் PIB பகிர்ந்துள்ளது. அதில், “e-PAN கார்டை ஆன்லைனில் டவுன்லோட் செய்வதற்கான படிப்படியான வழிகாட்டுதல். வருமானவரி துறை விவரமான தனிநபர் தகவல் குறித்து இமெயில் மூலமாக எந்த ஒரு கோரிக்கையும் எழுப்புவது கிடையாது என்பதை உறுதி செய்தது.”
“உங்களுடைய நிதி தகவல் மற்றும் தனிநபர் தகவலை கேட்டு வரும் எந்தவொரு இமெயில்கள், லிங்குகள், போன் கால்கள் மற்றும் SMSகளுக்கு நீங்கள் பதிலளிக்கக் கூடாது” என்று வருமான வரித்துறை கூறியுள்ளது. “மேலும், வருமான வரித்துறையானது ஒருபோதும் உங்களுடைய PIN நம்பர்கள், பாஸ்வேர்டுகளுக்கான கோரிக்கை கேட்டோ, அல்லது கிரெடிட் கார்டுகள், வங்கிகள் அல்லது பிற பொருளாதார அக்கவுன்டுகள் சம்பந்தமான அணுகல் தகவல்களை கேட்டோ இமெயில் மூலமாக கோரிக்கை விடுவது கிடையாது என்பதையும் கூறியுள்ளது.
அதிகாரப்பூர்வ வருமான வரித்துறை என்று வரக்கூடிய சந்தேகத்திற்குரிய இமெயில்களைப் பெறும்போது அதற்கு பதில் அளிக்க வேண்டாம் என்றும், அதில் இணைக்கப்பட்டுள்ள எந்தவொரு அட்டாச்மென்ட்களை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. ஏனெனில், இந்த அட்டாச்மென்ட்களில் உங்களுடைய சாதனத்தை ஹேக் செய்யக்கூடிய குறியீடுகள் அடங்கி இருக்கலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஆன்டி-வைரஸ் சாப்ட்வேர், ஆன்டி-ஸ்பைவர் மற்றும் ஃபயர்வால் போன்றவற்றைப் பயன்படுத்துங்கள். உங்களுடைய சாதனங்களை எப்பொழுதும் அப்டேட்டாக வைக்கவும். ஒரு சில பிஷ்ஷிங் இமெயில்கள் உங்களுடைய சாதனத்தை ஹேக் செய்யக்கூடிய சாஃப்ட்வேரைக் கொண்டு இருக்கலாம் அல்லது உங்களுக்கு தெரியாமலேயே இன்டர்நெட்டில் உங்களுடைய செயல்பாடுகளை கண்காணிக்கலாம். ஆன்டி-வைரஸ், ஆன்டி-ஸ்பைவேர் சாஃப்ட்வேர் மற்றும் ஃபயர்வால் போன்றவை இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து உங்களை பாதுகாக்கும்” என்று வருமான வரித்துறை கூறியுள்ளது.
வருமான வரித்துறையிடம் இருந்து அல்லாமல் போலியாக இமெயிலைப் பெறும்போது அதனை incident@cert-in.irg.in என்ற இமெயிலுக்கு பார்வேர்ட் செய்ய வேண்டும் என்று வரி செலுத்துவோருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. வருமான வரித்துறை போல நாடகமாடும் இமெயில் அல்லது வெப்சைட்டை நீங்கள் கண்டுபிடித்தால் உடனடியாக அந்த இமெயில் அல்லது வெப்சைட் URL-ஐ webmanager@incometax.gov.in என்ற இமெயில் IDக்கு அனுப்ப வேண்டும்.
December 09, 2025 6:27 PM IST


