• Login
Friday, October 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“போர் வெடித்தால்.. நாம் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவே நிற்க வேண்டும்!” பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை | Need to support Pakistan, Rajasthan BJP Chief Madan Rathore’s Pakistan Remark Sparks Political Row

GenevaTimes by GenevaTimes
October 16, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
“போர் வெடித்தால்.. நாம் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவே நிற்க வேண்டும்!” பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை | Need to support Pakistan, Rajasthan BJP Chief Madan Rathore’s Pakistan Remark Sparks Political Row
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


India

oi-Vigneshkumar

Time
Published: Friday, October 16, 2026, 7:30 [IST]

ஜெய்ப்பூர்: அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் ஏற்பட்டால், அண்டை நாடு என்ற அடிப்படையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவே இந்தியா நிற்கும் என்று ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மதன் ரத்தோர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது கருத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநில்களை சேர்ந்த பாஜக தலைவர்கள் சில நேரங்களில் கூறும் கருத்துகள் மிக பெரிய சர்ச்சையாக வெடித்துவிடுகிறது. அப்படியொரு சம்பவம் தான் மீண்டும் இப்போது நடந்துள்ளது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று பொருள்பட ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மதன் ரத்தோர் கூறிய கருத்து சர்ச்சையாகியுள்ளது.

BJP India pakistan

பாகிஸ்தான் உடன் நிற்க வேண்டும்

நேற்று வியாழக்கிழமை ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக தலைவர் மதன் ரத்தோர் கலந்து கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “இந்த விஷயத்தை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இன்று அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் ஏற்பட்டால், பாகிஸ்தான் நமது அண்டை நாடு என்பதால் நாம் அதனுடன் தன் நிற்க வேண்டும் என்று நான் கூறுகிறேன். ஆனால் நமக்குள் ஒரு பிரச்சினை ஏற்படும்போது, நாம் இந்தியாவின் பக்கம் நிற்போம். சரிதானே? நாம் புரிந்து கொள்ள வேண்டியது இதைத்தான்” என்று தெரிவித்தார்.

மதன் ரத்தோரின் கருத்து அங்கு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த கருத்தைு தேசவிரோதமானது என்று விமர்சித்த காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷமா முகமது, ராஜஸ்தான் பாஜக தலைவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸ் பாய்ச்சல்

இது குறித்து அவர் கூறுகையில், “நமது வீரர்களையும் மக்களையும் கொல்லும் பயங்கரவாத நாடான பாகிஸ்தான் மீது பாஜக கொண்டுள்ள பாசம் மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் ஏற்பட்டால், தான் பாகிஸ்தானுடன் இருப்பதாக ராஜஸ்தான் பாஜக தலைவர் மதன் ரத்தோர் கூறுகிறார். நரேந்திர மோடியும் அமித் ஷாவும் கூட பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கிறார்களா? இல்லையென்றால், தேசவிரோதமான இந்த கருத்தைக் கூறியவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை தெரிவிக்க வேண்டும்” என்று கூறினார்.

ஆம் ஆத்மி

மதன் ரத்தோரின் பேச்சு அடங்கிய வீடியோவை பகிர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களும் இதை கடுமையாக சாடியுள்ளனர். பாஜகவுகும் பாகிஸ்தானுக்கும் ஒரே மாதிரியான சித்தாந்த பின்னணி இருப்பதாகவும் ஆம் ஆத்மி தலைவர்கள் குற்றம்சாட்டினார். அவர் மேலும், “இனிமேல் யாருக்கும் சந்தேகம் இருக்காது. அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் ஏற்பட்டால் நாம் பாகிஸ்தானுடன் இருப்போம் என்று ராஜஸ்தான் பாஜக தலைவர் மதன் ரத்தோர் கூறுகிறார். உண்மையில் பாஜகவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஒரே மாதிரியான சித்தாந்த பின்னணி உள்ளது” என்று சாடியுள்ளார்.

இதற்கிடையே, அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் ஏற்பட்டால் இந்தியா பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கும் என்று மதன் ரத்தோர் கூறியதைச் சுட்டிக்காட்டி, சமூக வலைத்தளங்களில் பலரும் அவருக்கு எதிராக விமர்சனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

English summary

Rajasthan BJP president Madan Rathore has sparked controversy by saying India should stand with Pakistan(பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு): BJP leader latest news in tamil.

Read More

Previous Post

இறுதிக் கட்டத்தை எட்டிய இந்திய – அமெரிக்க ஒப்பந்தம்

Next Post

அங்க சுத்தி இங்க சுத்தி இந்தியாவிலும் கை வைத்த ஏஐ..!! கணினிகளை ஹேக் செய்தது அம்பலம்..!! | Rogue AI Agents Breach Indian Firms’ Systems: CERT-In Warns of Unauthorized Data Access after Australia Incident

Next Post
அங்க சுத்தி இங்க சுத்தி இந்தியாவிலும் கை வைத்த ஏஐ..!! கணினிகளை ஹேக் செய்தது அம்பலம்..!! | Rogue AI Agents Breach Indian Firms’ Systems: CERT-In Warns of Unauthorized Data Access after Australia Incident

அங்க சுத்தி இங்க சுத்தி இந்தியாவிலும் கை வைத்த ஏஐ..!! கணினிகளை ஹேக் செய்தது அம்பலம்..!! | Rogue AI Agents Breach Indian Firms’ Systems: CERT-In Warns of Unauthorized Data Access after Australia Incident

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin