இஸ்ரேலில் வன்முறை அதிகரித்து வருவதால், அங்கு வாழும் இந்தியர்கள் தேவையின்றி பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் போர் நடைபெற்று வரும் சூழலில், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட சம்பவம் இஸ்ரேலில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அங்கு நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறும், உள்ளூர் அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றவும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிக்க:
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் – உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
மேலும் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் இந்திய தூதரகம் கேட்டுக் கொண்ட இந்திய தூதரகம், தற்போதைய நிலையை மிகுந்த கவனத்துடன் கண்காணித்து வருவதாகவும், இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்
விதமாக இஸ்ரேலிய அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
தூதரகத்தில் பதிவு செய்யாதவர்கள், விரைவில் விவரங்களை பதிவு செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ள இந்திய தூதரகம், அவசர உதவி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரியை அறிவித்துள்ளது.
.