இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்தில் அமெரிக்கா எந்தப் பங்கும் வகிக்கவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசியதாக மத்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்திருக்கிறார்.
இஸ்ரேல்-ஈரான் மோதல் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் செவ்வாய்க்கிழமை அமெரிக்காவிற்கு அவசர அவசரமாக புறப்பட்டுச் சென்றார். இதனால், ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் டிரம்ப்பின் சந்திப்பு நடைபெறவில்லை.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரதமர் நரேந்திர மோடி 35 நிமிட தொலைபேசி உரையாடலை நடத்தியதாகவும், அந்த உரையாடலில் இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்ந்து நடைபெற்று வருவதாக மத்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
இந்த உரையாடல் குறித்து வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “அதிபர் டிரம்ப்பும் பிரதமர் மோடியும் இன்று சுமார் 35 நிமிடங்கள் பேசினர். உரையாடலின் போது, பாகிஸ்தானின் தாக்குதலுக்கு, இந்தியா ஏவுகணைகள் மூலம் பதிலடி கொடுக்கும் என்றும், ஆபரேஷன் சிந்தூர் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.

