Last Updated:
போர் என்பது இந்தியாவின் தேர்வு இல்லை என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீயிடம் அஜித் தோவல் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
போர் என்பது இந்தியாவின் தேர்வு இல்லை என்று சீன வெளியுறவு அமைச்சரிடம் அஜித் தோவல் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இந்தியா -பாகிஸ்தான் இடையே போர் மேகங்கள் சூழந்த நிலையில் திடீரென சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. கடந்த 3 நாட்களாக இந்தியா-பாகிஸ்தான் எல்லை போர் சூழலால் தகித்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டை அடுத்து சண்டை நிறுத்தத்துக்கு இரு நாடுகளும் சம்மதித்தன. இருநாடுகளின் சம்மதத்தை அடுத்து சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இதனால் காஷ்மீர் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் அமைதி திரும்பி வருகிறது.
இதற்கிடையே, இந்தியா பாகிஸ்தான் இடையே நிலவும் போர் சூழல் குறித்து, சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீயிடம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தொலைபேசியில் பேசினார். அப்போது பஹல்காம் தாக்குதலை சீனா கண்டிப்பதாக வாங் யீ கூறியுள்ளார். இந்தியாவும்-பாகிஸ்தானும் போரை நிறுத்துவதை சீனா ஆதரிப்பதாகவும் அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஆப்கானிஸ்தான் பகுதியில் இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் கூறியிருந்தது. பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டை இந்தியா மறுத்திருந்த நிலையில், ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத்துறையும் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக பேசிய ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் இனாயத்துல்லா, பாகிஸ்தானின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று மறுத்துள்ளார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu


