தெற்கு லெபனான் மீது இஸ்ரேலிய இராணுவம் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த 10 நாள் தற்காலிகப் போர்நிறுத்தம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்த ஒரு மணிநேரத்திற்கும் குறைவான காலப்பகுதியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அதாவது, ஏப்ரல் 17, 2026 அதிகாலை முதல் போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்த நிலையில் தெற்கு லெபனானின் கியாம் (Khiam) மற்றும் டிபைன் (Dibbine) நகரங்களைக் குறிவைத்து இஸ்ரேலியப் பீரங்கிகள் கடுமையான குண்டுவீச்சுகளை நடத்தியதாக லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பீரங்கித் தாக்குதல்
பீரங்கித் தாக்குதல்களுடன் நிறுத்தப்படாமல், அப்பகுதிகளில் இஸ்ரேலிய தரைப்படையினர் இயந்திரத் துப்பாக்கிச் சூடு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், மேற்கு பெக்கா (Bekaa) பள்ளத்தாக்கு மற்றும் ஜபல் அல்-ஷேக் (Jabal al-Sheikh) மலைத்தொடர் பகுதிகளில் இஸ்ரேலிய உளவு விமானங்கள் (Drones) தீவிரமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
போர்நிறுத்தம் நடைமுறையான சில நிமிடங்களிலேயே நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல்கள், அமைதி உடன்படிக்கையின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

