ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெகியான் மத்தியக்கிழக்கில் நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு மூன்று முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளார்.
அமைதியை நிலைநாட்ட சர்வதேச சமூகமும் சம்பந்தப்பட்ட தரப்பினரும் இந்தப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஈரானிய ஜனாதிபதி இதில் சுட்டிக்காட்டுகிறார்.
அவர் நிபந்தனைகளை பின்வருமாறு முன்வைத்துள்ளார்,
ஈரானின் சட்டபூர்வமான உரிமை
ஈரானின் சட்டபூர்வமான உரிமைகளை அங்கீகரிப்பது, அதாவது ஈரானிய ஆட்சியின் இறையாண்மை மற்றும் உரிமைகள் சர்வதேச மட்டத்தில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
ஏற்பட்ட சேதத்திற்கு நியாயமான இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுத்தல்.
மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் அல்லது தாக்குதல்கள் மீண்டும் நிகழாது என்பதற்கான உறுதியான சர்வதேச உத்தரவாதங்களையும் உறுதிமொழிகளையும் வழங்குதல்.
என்ற மூன்று நிபந்தனைகளை முன்வைத்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

