Last Updated:
போப் பிரான்சிஸ் 88 வயதில் மறைந்தார். அவரது சவப்பெட்டியில் ரோஜிட்டோ ஆவணமும் வைக்கப்பட்டது. இந்த ஆவணத்தில் போப்பின் வாழ்க்கை விவரங்கள் உள்ளன.
போப் ஆண்டவர் உடலுடன் ரோஜிட்டோ என்ற சுருள் வடிவிலான ஆவணமும் வைக்கப்பட்டது.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் காலமானார். அவருக்கு வயது 88. வாசப் பாதையில் ஏற்பட்ட பூஞ்சை, பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்று காரணமாக போப் பிரான்சிஸ் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த மார்ச் மாதம் வயோதிகம் சார்ந்த உடல்நலப் பிரச்சனைகளால் கடந்த 14 ஆம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே, போப் பிரான்சிஸ் நேற்று காலை வாடிகனில் உள்ள அவரது இல்லத்தில் மறைந்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இறுதி சடங்குக்கு முந்தைய நாள் இரவு அவரின் சவப்பெட்டி மூடப்படும். மறைந்த போப் பிரான்சிஸின் முகம் வெள்ளை நிற பட்டுத் திரையால் மறைக்கப்பட்டு அவர் காலத்தில் உருவாக்கப்பட்ட நாணயங்கள் மற்றும் ரோஜிட்டோ என்ற ஆவணமும் சவப்பெட்டியில் வைக்கப்பட்டது.
சுருள் அல்லது புத்தக வடிவில் வைக்கப்படும் ஆவணத்துக்கு ரோஜிட்டோ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஆவணத்தில் போப்பின் பிறப்பு, வளர்ப்பு, பிஷப் பணி உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். ஒவ்வொரு போப்பின் சவப் பெட்டியிலும் கட்டாயம் ரோஜிட்டோ இடம்பிடிக்கும். பல நூற்றாண்டுகளாக கடைபிடிக்கப்படும் மரபான ரோஜிட்டோகள் மரியாதை மிகுந்த ஆவணங்களாக கருதப்படுகின்றன.
April 22, 2025 2:01 PM IST


