Last Updated:
Pope Francis | கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் நலம்பெற வேண்டி மக்கள் பிரார்த்தனை.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் உடல்நிலை குறித்து கவலை தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவரது உடல்நிலையில் லேசான முன்னேற்றம் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவாசப் பாதையில் ஏற்பட்ட பூஞ்சை, பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்று காரணமாக அவர் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். 86 வயதான போப் பிரான்சிஸ், உடல்நலக் குறைவு இருந்தபோதிலும் தனது வழக்கமான பணிகளைச் செய்து வருவதாகவும், காசா நகர அதிகாரிகளுடன் உரையாடியதாகவும் வாடிகன் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க | Gold Rate: வரலாற்றில் புதிய உச்சம்..! தொடர் உயர்வில் தங்கம் விலை – இன்றைய நிலவரம் என்ன?
தற்போது ஆக்சிஜன் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போப் பிரான்சிஸின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் காணப்பட்டாலும், அவர் விரைவில் முழுமையாக குணமடைய வேண்டும் என மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
February 25, 2025 6:24 PM IST
Pope Francis | போப் பிரான்சிஸ் உடல்நிலையில் லேசான முன்னேற்றம்.. வாட்டிகன் வெளியிட்ட ஹெல்த் அப்டேட்!


