Last Updated:
சர்வதேச கடல் பகுதியில் போதை பொருள் கடத்திய இரண்டு படகுகளை தாக்கி அமெரிக்கா அழித்தது.
சர்வதேச கடல் பகுதியில் போதை பொருட்களை கடத்திய இரண்டு படகுகளை தாக்கி அழித்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தீவிரவாத அமைப்பால் இயக்கப்பட்ட இரண்டு படகுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதில் 5 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட இடம் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
அமெரிக்க அதிபர் டிரம்பின் உத்தரவுப்படி கரீபிய கடற்கரை மற்றும் பசிபிக் பெருங்கடல் வழியாக போதைப்பொருள் கடத்தி வரும் படகுகள் மீது அந்நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதுவரை 35 படகுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இதில் 115 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்காவுக்குள் போதை பொருட்கள் கொண்டுவருவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Jan 01, 2026 10:12 PM IST


