பருத்தித்துறை பகுதியில் இளைஞர்களை குறி வைத்து போதைப்பொருள் விநியோகிக்கப்படும் இடம் ஒன்று பருத்தித்துறையில் உள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.
பருத்தித்துறையில் உள்ள இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய இன்று (03) மாலை 6.20 மணியளவில் புலோலி விஸ்வகுல ஒழுங்கையில் உள்ள பற்றைப் பகுதி கண்காணிப்பிற்கு கீழ் கொண்டு வந்த போது, அப் பற்றைக்குள் மறுத்து வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 200 கிராம் கேரளா கஞ்சா, 29 போதை மாத்திரை கட்டுகள் அடங்கிய 290 போதை மாத்திரைகள் மற்றும் இலத்திரனியல் தராசு என்பன மீட்கப்பட்டு பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளது.
நாகர்கோவில் விஷேட நிருபர்


