கோலாலம்பூர்:
காரில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதமரின் மகன் தொடர்பான விசாரணை இன்னும் தொடர்கிறது.
இந்த வழக்கு ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39A(1) மற்றும் பிரிவு 15(1)(A) கீழ் விசாரணையில் உள்ளதாக சிலாங்கூர் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டையும் விதிக்கப்படலாம்.
கடந்த ஆகஸ்ட் 23 அன்று ஸ்பிரிண்ட் நெடுஞ்சாலையில் போலீசார் மேற்கொண்ட சோதனையில், காரில் ஒரு சிறிய அளவு ஹெரோயின் மற்றும் போதைப்பொருள் உபகரணங்களை போலீசார் கண்டுபிடித்தனர். 20 வயதுடைய சந்தேக நபருக்கு இதற்குமுன் போதைப்பொருள் தொடர்பான குற்ற பதிவும் உள்ளது.
இந்த வார தொடக்கத்தில் இந்த வழக்குக்கான விசாரணை ஆவணங்கள் போலீசார் இறுதி செய்வார்கள் என்று அவர் மேலும் கூறினார்.




