• Login
Tuesday, August 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

போதைப்பொருள் சட்டத்தில் மாற்றங்களை முன்வைத்த அரசு: ‘ஐஸ்’ சேர்ப்பு; தண்டனைகள் தொடர்பிலும் புதிய ஏற்பாடுகள்! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
August 25, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
போதைப்பொருள் சட்டத்தில் மாற்றங்களை முன்வைத்த அரசு: ‘ஐஸ்’ சேர்ப்பு; தண்டனைகள் தொடர்பிலும் புதிய ஏற்பாடுகள்! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
போதைப்பொருள் சட்டத்தில் மாற்றங்களை முன்வைத்த அரசு: ‘ஐஸ்’ சேர்ப்பு; தண்டனைகள் தொடர்பிலும் புதிய ஏற்பாடுகள்!

‘மெத்தம்பெட்டமைன்’ என்பது பொதுவாக ‘ஐஸ்’ (Ice) அல்லது ‘கிரிஸ்டல் மெத்’ என்று அழைக்கப்படும் கடுமையான, செயற்கையாகத் தயாரிக்கப்படும் ஒரு வீரியமிக்க போதைப்பொருளாகும்.

விஷப் பொருட்கள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் உத்தரவின் பேரில், நேற்று திங்கட்கிழமை (24) குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தச் சட்டமூலத்தின் மூலம் தற்போதுள்ள சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளதுடன், புதிய சட்ட ஏற்பாடுகளும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

குறிப்பாக, குறித்த கட்டளைச் சட்டத்தின் 54ஆவது பிரிவின் முதலாவது உப பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஹெரோய்ன், கொக்கேய்ன், மோர்ஃபின் மற்றும் அபின் ஆகிய போதைப்பொருட்களின் பட்டியலில், ‘மெத்தம்பெட்டமைன்’ (Methamphetamine) என்ற போதைப்பொருளும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. ‘மெத்தம்பெட்டமைன்’ என்பது பொதுவாக ‘ஐஸ்’ (Ice) அல்லது ‘கிரிஸ்டல் மெத்’ என்று அழைக்கப்படும் கடுமையான, செயற்கையாகத் தயாரிக்கப்படும் ஒரு வீரியமிக்க போதைப்பொருளாகும்.

மேலும், அரச பகுப்பாய்வாளரால் வெளியிடப்படும் அறிக்கைகள் தொடர்பிலும் சட்டத் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. அத்துடன், போதைப்பொருள் குற்றங்களுக்காக குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும் தண்டனைகள் தொடர்பிலும் புதிய ஏற்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதனுடன், போதைப்பொருள் குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்யும் போது புலனாய்வு அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் சட்டமூலத்தில் புதிய விதிமுறைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்தத் திருத்தங்கள் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை விசாரணை செய்வது, சாட்சியங்களை உறுதிப்படுத்துவது மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் புதிய சட்ட ஏற்பாடுகள் அமுலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

இறந்துவிட்டதாக பொலிஸார் அறிவித்த வாரியப்பொல சிறை கைதி, இறுதிச்சடங்கு வீட்டுக்கே உயிருடன் வந்த அதிர்ச்சி சம்பவம்! – Sri Lanka Tamil News

Next Post

அமெரிக்கத் தடைகளை சமாளிக்க ஈரானின் 2 ஆண்டு பொருளாதாரத் திட்டம்|‘No One Cares’: Iran Fires Back at Trump’s Sanctions Threat

Next Post
அமெரிக்கத் தடைகளை சமாளிக்க ஈரானின் 2 ஆண்டு பொருளாதாரத் திட்டம்|‘No One Cares’: Iran Fires Back at Trump’s Sanctions Threat

அமெரிக்கத் தடைகளை சமாளிக்க ஈரானின் 2 ஆண்டு பொருளாதாரத் திட்டம்|‘No One Cares’: Iran Fires Back at Trump’s Sanctions Threat

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin