• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

​போட்டியில் பங்கேற்க அர்ஷத் நதீமை அழைத்ததற்காக என்னுடைய நேர்மையை கேள்வி கேட்காதீர்கள்: நீரஜ் சோப்ரா வேதனை | Neeraj Chopra breaks silence on inviting Pakistan Arshad Nadeem for NC Classic

GenevaTimes by GenevaTimes
April 26, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
​போட்டியில் பங்கேற்க அர்ஷத் நதீமை அழைத்ததற்காக என்னுடைய நேர்மையை கேள்வி கேட்காதீர்கள்: நீரஜ் சோப்ரா வேதனை | Neeraj Chopra breaks silence on inviting Pakistan Arshad Nadeem for NC Classic
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: ஒலிம்​பிக் ஈட்டி எறிதலில் இரு முறை பதக்​கம் வென்ற நட்​சத்​திர வீர​ரான இந்​தி​யா​வின் நீரஜ் சோப்​ரா வரும் மே 24-ம் தேதி பெங்​களூரு​வில் ‘நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல்’ என்ற போட்​டியை நடத்த திட்​ட​மிட்​டுள்​ளார்.

இந்த போட்​டி​யில் பங்​கேற்க பாரிஸ் ஒலிம்​பிக்​கில் தங்​கப் பதக்​கம் வென்ற பாகிஸ்​தானைச் சேர்ந்த அர்​ஷத் நதீ​முக்​கு, நீரஜ் சோப்ரா அழைப்பு விடுத்​திருந்​தார். ஆனால் நீரஜ் சோப்​ரா​வின் அழைப்பை அர்​ஷத் நதீம் நிராகரித்​தார். மே 22-ம் தேதி தென் கொரி​யா​வில் நடை​பெற உள்ள ஆசிய தடகள சாம்​பியன்​ஷிப் தொடரில் பங்​கேற்க உள்​ள​தால் தன்​னால் கலந்​து​கொள்ள முடி​யாது என்று அர்​ஷத் நதீம் விளக்​கமளித்​திருந்​தார்.

இதற்​கிடையே கடந்த செவ்​வாய்​கிழமை ஜம்மு – காஷ்மீரின் பஹல்​காமில் உள்ள சுற்​றுலாதலத்​தில் தீவிர​வா​தி​கள் நடத்​திய துப்​பாக்​கிச் சூடு தாக்​குதலில் 2 வெளி​நாட்​டினர் உட்பட 26 பேர் கொல்​லப்​பட்​டனர். இது நாடு முழு​வதும் பெரும் அதிர்​வலையை ஏற்​படுத்​தி​யது. இத்​தகைய சூழலில் பாகிஸ்​தான் வீரருக்கு நீரஜ் சோப்ரா அழைப்பு விடுத்​ததை சிலர் சமூக வலை​தளங்​களில் கடுமை​யாக விமர்​சித்​தனர்.

இந்​நிலை​யில் இந்த விமர்​சனங்​களுக்கு நீரஜ் சோப்ரா எக்ஸ் தளத்​தில் விளக்​கம் அளித்​துள்​ளார். அதில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: கிளாசிக் போட்​டி​யில் பங்​கேற்க அர்​ஷத் நதீ​முக்கு நான் அழைப்பு விடுத்​தது குறித்து அதி​கம் பேசப்​படு​கிறது, அதில் பெரும்​பாலானவை வெறுப்பு மற்​றும் துஷ்பிரயோக​மாக உள்​ளது. என் குடும்​பத்​தைக் கூட அவர்​கள் விட்​டு​வைக்​க​வில்​லை.

அர்​ஷத்​துக்கு நான் விடுத்த அழைப்பு ஒரு தடகள வீரரிட​மிருந்து மற்​றொரு விளை​யாட்டு வீரருக்கு சென்​றது. இதில் அதி​க​மாகவோ, குறை​வாகவோ எது​வும் இல்​லை. நீரஜ் சோப்ரா கிளாசிக்​கின் நோக்​கம் சிறந்த விளை​யாட்டு வீரர்​களை இந்​தி​யா​வுக்​குக் கொண்​டு​வரு​வதும், நம் நாடு உலகத் தரம் வாய்ந்த விளை​யாட்டு நிகழ்​வு​களின் தாயக​மாக இருக்க வேண்​டும் என்​ப​தற்​காகத்​தான்.

பஹல்​காமில் தீவிர​வாத தாக்​குதல் நடை​பெறு​வதற்கு இரண்டு நாட்​களுக்கு முன்பு போட்​டிகளில் பங்​கேற்க வரு​மாறு அனைத்து விளை​யாட்டு வீரர்​களுக்​கும் அழைப்பு விடுக்​கப்​பட்​டிருந்​தது. கடந்த 48 மணி நேரத்​தில் நடந்த எல்​லா​வற்​றிற்​கும் பிறகு, என்​.சி கிளாசிக்​கில் அர்​ஷத் பங்​கேற்​பது முற்​றி​லும் கேள்விக்​குறி​யாக இருந்​தது. எனது நாடும் அதன் நலன்​களும் எப்​போதும் முதன்​மை​யாக இருக்​கும்.

தீவிர​வாத தாக்​குதலில் தங்​களது உறவினர்களை இழந்து தவிப்​பவர்​களு​டன் எனது எண்​ணங்​களும் பிரார்த்​தனை​களும் உள்​ளன. நடந்த சம்​பவத்​தால் ஒட்​டுமொத்த தேசத்​துட​னும் சேர்த்து நானும் காய​மும் கோப​மும் அடைகிறேன். நம் நாட்​டின் பதில், ஒரு தேச​மாக நமது வலிமை​யைக் காண்​பிக்​கும் மற்​றும் நீதி வழங்​கப்​படும் என்று நம்​பு​கிறேன்.

பல ஆண்​டு​களாக எனது நாட்டை பெரு​மை​யுடன் சுமந்து வரு​கிறேன், எனவே எனது நேர்மை கேள்விக்​குள்​ளாக்​கப்​படு​வதைப் பார்ப்​பது வேதனையளிக்​கிறது. எந்​தக் காரண​மும் இல்​லாமல் என்​னை​யும் என் குடும்​பத்​தை​யும் குறிவைக்​கும் மக்​களிடம் நான் விளக்க வேண்​டி​யிருப்​பது எனக்கு வேதனையளிக்​கிறது. நாங்​கள் எளிய மக்​கள், தயவுசெய்து எங்​களை வேறு எது​வாக​வும் காட்ட வேண்​டாம். ஊடகங்​களின் சில பிரிவு​கள் என்​னைச் சுற்றி பல தவறான கதைகளை உரு​வாக்​கி​யுள்​ளன, ஆனால் நான் பேச​வில்லை என்​ப​தால், அது உண்​மை​யாகி​வி​டாது. மக்​கள் எவ்​வாறு கருத்​துக்​களை மாற்​றுகிறார்​கள் என்​ப​தைப் புரிந்​து​கொள்​வதும் எனக்கு கடின​மாக உள்​ளது. இவ்​வாறு நீரஜ் சோப்​ரா கூறியுள்​ளார்​.



Read More

Previous Post

‘செங்கோட்டையன் எண்ட்ரி.. 2026 நமக்கே.. உற்சாகப்படுத்திய இபிஎஸ்’ மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?

Next Post

தங்கம் வாங்க இதுதான் சரியான தருணம்.. மிஸ் பண்ணிடாதீங்க – இன்றைய விலை!

Next Post
தங்கம் வாங்க இதுதான் சரியான தருணம்.. மிஸ் பண்ணிடாதீங்க – இன்றைய விலை!

தங்கம் வாங்க இதுதான் சரியான தருணம்.. மிஸ் பண்ணிடாதீங்க - இன்றைய விலை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin