குடியரசு துணைத் தலைவர் தேர்தலை, போட்டியின்றி நடத்த எதிர்க்கட்சிகளின் ஆதரவு தேவை என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் பாஜக மூத்த தலைவர்கள் தொடர்பில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என ஜெ.பி. நட்டா இன்று (ஆக. 17) அறிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுடன் ஜெ.பி. நட்டா பேசியதாவது,
”மகாரஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவருக்கான வேட்பாளராக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு கூட்டணி கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

