சிங்கப்பூரில் போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை விரைந்து செலுத்துவோருக்கு இனி தள்ளுபடி வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
போக்குவரத்து விதிமீறல் குற்ற அறிவிப்பு கொடுக்கப்பட்ட 14 நாட்களுக்குள் அபராதத்தை செலுத்தும் வாகன ஓட்டிகளுக்கு $30 தள்ளுபடி வழங்கப்படும்.
வெளிநாட்டு ஊழியர்களை போற்றும் “சர்வதேச குடியேறிகள் தினம்” – சிங்கப்பூரில் 300 ஊழியர்கள் பங்கேற்பு
இது வரும் 2026 ஜனவரி 1 முதல் நடப்புக்கு வரும் என்று சிங்கப்பூர் காவல்துறை (SPF) திங்கள்கிழமை (டிசம்பர் 1) தெரிவித்துள்ளது.
அதிகரித்து வரும் அபராதங்கள் மற்றும் மேல்முறையீடுகளைச் சமாளிக்க இந்த புதிய தள்ளுபடி நடைமுறை பயன்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டில் ஒரு மாதத்திற்கு சராசரியாக சுமார் 6,000 போக்குவரத்து விதிமீறல் குற்ற அறிக்கைகள் வாகன ஓட்டிகளுக்கு கொடுக்கப்பட்டது.
மேலும் மாதத்திற்கு சுமார் 1,000 க்கும் மேற்பட்ட மேல்முறையீடுகள் வந்ததாகவும் போக்குவரத்து காவல்துறை (TP) கூறுகிறது.
- போக்குவரத்து விதிமீறல் குற்றங்களுக்காக $50 அல்லது அதற்கு மேற்பட்ட அபராதத் தொகையை எதிர்கொண்ட சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.
- தகுதிபெறும் வாகன ஓட்டிகளுக்கு “Traffic offence” என்ற போக்குவரத்து குற்றம் குறித்த அறிவிப்பு மூலம் தகவல் கொடுக்கப்படும்.
- வரும் ஜனவரி 1 முதல், அறிவிப்பு வந்த 14 நாட்களுக்குள் அபராத தொகை செலுத்தும் வாகன ஓட்டிகளுக்கு மட்டுமே இந்த தள்ளுபடி வழங்கப்படும்.
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் அதிரடி சோதனை: 12 ஊழியர்கள் கைது – 3 பேருக்கு அபராதம்

