பொல்கஹவெல மற்றும் பேராதனை இடையே பயணிக்கும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பயணிகளின் வசதிக்காக புதிய ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சேவையானது இன்று (12.10.2026) முதல் ஆரம்பிக்கபட்டவுள்ளது.
கடந்த டிட்வா புயலைத் தொடர்ந்து, கடந்த 02ஆம் திகதி முதல் மலையக ரயில் பாதையில் ரம்புக்கனை – கம்பளை இடையே ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது வழமை போன்று முன்னெடுக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில்வே திணைக்களம்
இதற்கு இணையாக, பொல்கஹவெல – பேராதனை இடையே பயணிக்கும் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஏனைய பயணிகளின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் நோக்கில், இந்தப் புதிய ரயில் சேவை தினமும் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

