• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பொலிவை இழக்கும் ஜரிகை உற்பத்தி: காஞ்சி ஆலையை மீட்க என்ன வழி? | about lace manufacturing factory was explained

GenevaTimes by GenevaTimes
January 22, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
பொலிவை இழக்கும் ஜரிகை உற்பத்தி: காஞ்சி ஆலையை மீட்க என்ன வழி? | about lace manufacturing factory was explained
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


​காஞ்​சிபுரத்​தில் பட்டு நெசவுத் தொழிலை நம்பி 10 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட தொழிலா​ளர்கள் உள்ளனர். இவர்​களின் நலன் கருதி கைத்தறி சங்கங்களை தோற்று​வித்​தவர் சுதந்திர போராட்டத் தியாகி கே.எஸ்​.பார்த்​தசா​ரதி. இவர், கூட்டுறவு சங்கங்கள் மூலம் உருவாக்​கப்​படும் பட்டுச் சேலைகளுக்கான ஜரிகையை சூரத் பகுதி​யில் இருந்தே வாங்க வேண்டி இருப்​ப​தால் அந்த ஜரிகையை தயாரிக்​கும் தொழிற்​சாலையை தமிழக அரசே நிறுவ வேண்​டும் என்று அப்போது முதல்​வராக இருந்த அண்ணா​விடம் கோரிக்கை வைத்​தார். அண்ணா அதற்கான நடவடிக்கைகளை எடுத்​தார்.

ஆனாலும் எம்ஜிஆர் ஆட்சிகாலத்​தில் 1971-ம் ஆண்டு​தான் இந்த ஜரிகை உற்பத்தி தொழிற்​சாலை காஞ்​சிபுரம் ஓரிக்கை​யில் தொடங்​கப்​பட்​டது. தமிழக அரசால் தொடங்​கப்​பட்டு தற்போதுவரை நடத்​தப்​படும் ஒரே ஜரிகை உற்பத்தி நிறு​வனம் இது என்பது குறிப்​பிடத்​தக்​கது.

இந்த ஜரிகை உற்பத்தி தொழிற்​சாலை முதலில் 3,000 ஆயிரம் மார்க் ஜரிகை உற்பத்தி செய்​யும் அளவுக்​கு​தான் தொடங்​கப்​பட்​டது. பின்னர் ஜரிகைக்கான தேவை அதிகரித்​ததை தொடர்ந்து 8 ஆயிரம் மார்க்காக உற்பத்தி அளவு உயர்த்​தப்​பட்​டது. இங்கு ஒரு மார்க் என்பது 242 கிராம் ஜரிகை அளவை குறிக்​கும். கடந்த 20 ஆண்டு​களுக்கு முன்பு ஆண்டுக்கு ரூ.1.5 கோடி லாபம் ஈட்டும் தொழிற்​சாலையாக இந்த ஜரிகை தொழிற்​சாலை வளர்ந்​திருந்​தது.

ஆனால் கடந்த சில ஆண்டு​களாக இந்த ஆலையின் ஜரிகை விற்​பனை​யில் கடும் சரிவு ஏற்பட்​டுள்​ளது. கூட்டுறவு நிறு​வனங்கள் தாங்கள் உற்பத்தி செய்​யும் பட்டு ஆலைகளில் கண்டிப்பாக 60 சதவீதம் இந்த ஜரிகையை பயன்​படுத்த வேண்​டும் என்று உத்தர​விட்டும் இதன் உற்பத்தி தற்போது 3000 ஆயிரம் மார்க்காக குறைக்​கப்​பட்டு​விட்​டது. இந்தத் தொழிற்சாலை​யில் பணிசெய்​யும் தொழிலா​ளர்கள் எண்ணிக்கை​யும் தற்போது 150-ல் இருந்து 60-ஆக குறைந்​து​விட்​டது.

வளர்ந்து வரும் தொழில்​நுட்பம் மற்றும் சந்தை வாய்ப்பு​களுக்கு ஏற்ப இந்த நிறு​வனம் மேம்​படுத்​தப்​பட​வில்லை என்ற குற்​றச்​சாட்டு​கள் ஒருபுறம் இருந்​தா​லும், கூட்டுறவு சங்கங்​களின் பட்டுச் சேலை விற்​பனை​யில் ஏற்பட்ட சரிவு இந்த ஜரிகை தொழிற்​சாலை​யை​யும் பாதித்​திருப்​பதாக பல்வேறு தரப்​பினர் தெரிவிக்​கின்​றனர்.

இதுகுறித்து கே.எஸ்​.பார்த்​தசாரதி நெசவாளர் சங்கத்​தின் தலைவர் ஜெ.கமலநாதனிடம் கேட்​ட​போது அவர் கூறியது: ஓரிக்கை ஜரிகை தொழிற்​சாலை​யின் ஜரிகை உற்பத்தி குறைந்​ததற்கு தொழில்நுட்பக் குறைபாடு​களைத் தாண்டி ஜரிகைக்கான தேவை குறைந்தது ஒரு முக்கிய காரணம்.

காஞ்சிபுரம் ஓரிக்கையில் இயங்கும் ஜரிகை உற்பத்தி தொழிற்சாலை.

பட்டு கூட்டுறவு சங்கங்கள் கண்டிப்பாக இந்த ஜரிகை ஆலையின் ஜரிகையை 60 சதவீதம் பயன்​படுத்த வேண்​டும் என்ற அரசு உத்தரவு இருப்​ப​தால்​தான் இந்த அளவுக்கு கூட உற்பத்தி நடைபெறுகிறது. இந்த நிறு​வனம் தயாரிக்​கும் ஒரிஜினல் ஜரிகை​யில் 0.5 சதவீதம் தங்க​மும், 40 சதவீதம் வெள்​ளி​யும், 35.5 சதவீதம் காப்​பரும், 24 சதவீதம் பட்டு இழையும் இருக்​கும்.

இதன் விலை ஒரு மார்க் 26 ஆயிரத்தை தாண்டி விற்​கிறது. தங்கம், வெள்ளி விலை​யேற்றம் காரணமாக இதன் விலை அதிகரித்​துள்ளது. சூரத்​தில் இருந்து கிடைக்​கும் ஜரிகை இந்த நிறு​வனத்​தின் ஜரிகை​யைவிட சுமார் ரூ.600 மட்டுமே குறைவாக கிடைக்​கிறது. ஆனால் தனியார் யாரும் இந்த நிறு​வனத்​தின் ஜரிகைகளை வாங்​கு​வ​தில்லை. காஞ்​சிபுரம் பட்டு என்ற பெயரில் குறைந்த விலை ஜரிகைகளை வாங்கி சேலைகளை​யும் குறைந்த விலைக்கு விற்​கின்​றனர்.

அவர்கள் விற்​கும் சேலைகளில் பயன்​படுத்​தும் ஜரிகை​யில் இந்த அளவுக்கு தங்கம், வெள்ளி இருக்​காது. திரு​மணத்​துக்கு 10 சேலை எடுப்​பவர்கள் கூட முகூர்த்த சேலையை மட்டுமே கூட்டுறவு சங்கங்​களில் எடுக்​கின்​றனர். விலை குறைவாக இருப்​ப​தால் மற்ற சேலைகளை தனியார் கடைகளில் எடுக்​கின்​றனர். தங்கம், வெள்ளி விலை​யேற்​றத்​தால் ஜரிகை விலை ஏறியது, இதனால் பட்டுச் சேலை விலை​ ஏறியதும் விற்பனை சரிவுக்கு முக்கிய காரணம்.

பட்டுச் சேலை விற்பனை சரிந்​த​தால் ஓரிக்கை ஜரிகை தொழிற்​சாலை​யிலும் உற்பத்தி சரிந்​து​விட்​டது. தற்போது பட்டு நூலுக்கு 15 சதவீதம் அரசு மானியம் வழங்​கு​கிறது. அதேபோல் அரசு நிறு​வனமான ஓரிக்கை ஜரிகை நிறு​வனத்​தில் கொள்​முதல் செய்​யப்​படும் ஜரிகைக்​கும் அரசு மானியம் வழங்​கினால் ஜரிகை உற்பத்தி தொழிற்​சாலையை மீட்க முடியும் என்றார்.

இதுகுறித்து கைத்தறி துணை இயக்​குநர் அலுவல​கத்​தில் சிலரிடம் கேட்​ட​போது, ஓரிக்கை ஜரிகை தொழிற்​சாலை​யிடம் இருந்து சேலை உற்பத்​திக்கு தகுந்​தாற்​போல் எவ்வளவு தேவையோ அந்த அளவுக்​கு​தான் ஜரிகை வாங்கி இருப்பு வைக்க முடி​யும். விற்பனை குறைந்​த​தால் உற்பத்​தி​யும் குறைந்​து​விட்​டது.

ஓரளவுக்கு மேல் மத்திய கூட்டுறவு வங்​கி​களில் கடன் பெற்று ஜரிகை வாங்கி வைக்க ​முடி​யாது. தேங்​கிக் கிடக்​கும் சேலைக்கு ​மானி​யம், ஜரி​கைக்கு ​மானி​யம் ஆகியவை வழங்​கினால்​தான் சேலை உற்​பத்​தியை அதிகரிக்க ​முடி​யும். அப்​போது​தான் கூடு​தல் ஜரிகையை கூட்​டுறவு நிறுவனங்​கள்​ வாங்​க ​முடி​யும்​ என்​றனர்​.



Read More

Previous Post

மதுரையில் டங்ஸ்டன் திட்டம் அமலாகாது -போராட்ட குழுவினரிடம் மத்திய அமைச்சர் உறுதி

Next Post

“திறமையாளர்களையே அமெரிக்கா வரவேற்கும்!” – ஹெச்1-பி விசா விவகாரத்தில் ட்ரம்ப் உறுதி | We need great people to come to US: Trump weighs in on H-1B visa debate

Next Post
“திறமையாளர்களையே அமெரிக்கா வரவேற்கும்!” – ஹெச்1-பி விசா விவகாரத்தில் ட்ரம்ப் உறுதி | We need great people to come to US: Trump weighs in on H-1B visa debate

“திறமையாளர்களையே அமெரிக்கா வரவேற்கும்!” - ஹெச்1-பி விசா விவகாரத்தில் ட்ரம்ப் உறுதி | We need great people to come to US: Trump weighs in on H-1B visa debate

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin