Last Updated:
இயேசு கிறிஸ்துவின் சக்தியை கொண்டாடும் வகையில் இந்த நாட்டுப்புற நடன அணிவகுப்பு நடைபெற்றுள்ளது.
பொலிவியாவில் நடைபெற்ற நாட்டுப்புற நடன அணிவகுப்பின், கண்ணைக் கவரும் வண்ணமயமான காட்சிகள் இணையத்தை கலக்கி வருகின்றன.
அந்நாட்டின் தலைநகர் லா பாஸில், இயேசு கிறிஸ்துவின் சக்தியை கொண்டாடும் வகையில், பிரம்மாண்ட நாட்டுப்புற நடன அணிவகுப்பு நடைபெற்றது. இதில் சுமார் 87 ஆயிரம் நடனக் கலைஞர்கள் பங்கேற்றனர். இதில் 47 நடன குழுக்கள் பங்கேற்ற நிலையில், 24 மணி நேரத்திற்கு இந்த அணிவகுப்பு நடைபெற்றது.
Son 32 años de llevar el folklore en la sangre: 15 años taconeando en los Caporales; el resto, entregado al ritmo majestuoso de la Morenada.
El Gran Poder no es solo una fiesta; es la devoción, el esfuerzo de miles de familias y la fuerza viva de nuestras raíces. La cultura es… pic.twitter.com/AuZfk5WNJ1
— Rodrigo Paz Pereira (@Rodrigo_PazP) August 1, 2026
காலனித்துவ கால ஆப்பிரிக்க அடிமைகளின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் மொரெனாடா, ஆஃப்ரோ-பொலிவிய பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் கபோரலெஸ் (CAPORALES), பழங்குடியின வீரர்களின் போர்முறையை சித்தரிக்கும் டின்கு உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய நடனங்கள் அரங்கேறின. ஆண்டியன் கத்தோலிக்க மரபும், பழங்குடியின கலாசாரமும் இணைந்த இந்த விழா, 2019-ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்தது.


