• Login
Monday, October 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு: ஐரோப்பிய நாடுகளில் வெடித்த போராட்டம் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
October 19, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு: ஐரோப்பிய நாடுகளில் வெடித்த போராட்டம் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
ஐரோப்பா
/
பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு: ஐரோப்பிய நாடுகளில் வெடித்த போராட்டம்

ஐரோப்பிய நாடுகளில் நிலவும் விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடியைக் கண்டித்துப் பிரான்ஸ், அல்பேனியா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


ஐரோப்பிய நாடுகளில் நிலவி வரும் தீவிர பொருளாதார நெருக்கடி, மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதித்துள்ள நிலையில், அரசுகளுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. வீட்டு வாடகை, சொத்து மதிப்பு உயர்வு, பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிபொருள் செலவுகள் மற்றும் கல்விக் கட்டண உயர்வு ஆகியவை பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

இவற்றுடன் அரசு நிர்வாகங்களின் செயல்பாடுகள், பொதுச் சேவைகளின் தரம் குறைதல் மற்றும் வேலைவாய்ப்பின்மை தொடர்பான கவலைகளும் இணைந்து பல நாடுகளில் போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

பிரான்சில் விலைவாசி உயர்வு மற்றும் சமத்துவமின்மையைக் கண்டித்து சுமார் எட்டு லட்சம் பேர் நாடு தழுவிய அளவில் வீதிகளில் இறங்கிப் போராடினர். பெரும்பாலான இடங்களில் அமைதியான முறையில் போராட்டங்கள் நடைபெற்றாலும், சில பகுதிகளில் கடுமையான வன்முறை பதிவானது.

லிமோஜஸ் நகரில் இரண்டு உலகப் போர்களைக் கடந்து நின்ற 140 ஆண்டுகள் பழமையான டவுன் ஹால் கட்டடத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் அது அழிந்தது. தலைநகர் பாரிசில் வணிக வளாகங்களைச் சூறையாட முயன்றவர்களைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர்.

வங்கிகள், கடைகள் சேதப்படுத்தப்பட்டு வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். மேலும், அத்துமீறல்களில் ஈடுபட்ட 1,800-க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் இமானுவேல் மேக்ரான் எச்சரித்துள்ளார்.

அல்பேனியா தலைநகர் டிரானாவில் ஊழல், வேலைவாய்ப்பின்மை மற்றும் கல்விக் கட்டமைப்புச் சீர்குலைவைக் கண்டித்து, பிரதமர் எடி ராமா பதவி விலக வலியுறுத்தி ஐந்தாவது நாளாகப் போராட்டம் நீடித்தது. போராட்டக்காரர்கள் கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை வீசிய நிலையில், போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகள் மற்றும் ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

இத்தாலியின் மிலன் மற்றும் போலோனா நகரங்களில் விலைவாசிக்கு எதிராக நடைபெற்ற பேரணிகளில் மோதல் வெடித்ததை அடுத்து, தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் கூட்டத்தை போலீசார் கட்டுப்படுத்தினர்.

போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில், கடந்த பத்தாண்டுகளில் வீடுகளின் விலை இரு மடங்காக அதிகரித்துள்ளதைக் கண்டித்து ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் கல்விக் கட்டண உயர்வு மற்றும் உயர்கல்விச் சீர்திருத்தங்களை எதிர்த்து மாணவர் அமைப்புகள் நடத்திய போராட்டங்களில் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஐரோப்பிய நாடுகளில் போராட்டங்களுக்கான பின்னணி வெவ்வேறாக இருந்தாலும், பொருளாதாரச் சுமை மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவை அனைத்து நாடுகளுக்கும் பொதுவான பிரச்னையாக மாறியுள்ளன.

இதற்கிடையே, பிரான்ஸ் வன்முறை குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஆகியோர் விமர்சனக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

Read More

Previous Post

நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை…! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Next Post

ஓடிடியில் வெளியாகும் “டோரதி” – எப்போது, எந்த தளத்தில் பார்க்கலாம்?…

Next Post
ஓடிடியில் வெளியாகும் “டோரதி” – எப்போது, எந்த தளத்தில் பார்க்கலாம்?…

ஓடிடியில் வெளியாகும் “டோரதி” – எப்போது, எந்த தளத்தில் பார்க்கலாம்?…

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin