[ad_1]
Last Updated:
பிரிக்ஸ் மாநாட்டில் ஜெய்சங்கர் வெளிப்படையான பொருளாதாரம் வலியுறுத்தினார்.
பொருளாதார நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்க வேண்டுமென ’பிரிக்ஸ்’ அமைப்பு மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அடாவடி வரி விதிப்பு நடவடிக்கைக்கு மத்தியில் ‘பிரிக்ஸ்’ அமைப்பின் உச்சி மாநாடு காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது. பிரேசில் அதிபர் லூலா டா சில்வா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், இந்தியா தரப்பில் ஜெய்சங்கர் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், நிலையான வர்த்தகத்தை மேம்படுத்த ஆக்கப்பூர்வமான மற்றும் கூட்டுறவு அணுகுமுறை வேண்டும் என்றார். தொடர்ந்து பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்காவின் வரியை சமாளிக்க ‘பிரிக்ஸ்’ நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார். மேலும் அமெரிக்காவின் வரி போர், உலகப் பொருளாதாரத்தையும், வர்த்தக விதிகளையும் கடுமையாக சீர் குலைத்துள்ளதாகக் கூறினார்.
இதனிடையே, வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவாரோ, ‘பிரிக்ஸ்’ நாடுகளை காட்டேறிகளுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார். நியாயமற்ற வர்த்தக நடைமுறையால் ’பிரிக்ஸ்’ நாடுகள் அமெரிக்காவின் ரத்தத்தை உறிஞ்சுவதாக விமர்சித்துள்ளார். மேலும், அமெரிக்காவுடன் வர்த்தம் செய்யாமல் சீனா, ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளால் பிழைக்க முடியாது எனவும் சவால் விடுத்துள்ளார்.
Delhi,Delhi,Delhi
September 09, 2025 7:08 AM IST
“பொருளாதார நடவடிக்கை வெளிப்படையாக இருக்க வேண்டும்..” ’பிரிக்ஸ்’ மாநாட்டில் ஜெய்சங்கர் வலியுறுத்தல்!