Last Updated:
இந்த ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு உலகளாவிய பொருளாதார நிபுணர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.
ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் அமைப்பு, பொருளாதாரம் மற்றும் மேக்ரோ எகனாமிக்ஸ் துறையில் நிகழ்த்திய மாபெரும் பங்களிப்பிற்காக பொருளாதார அறிஞர்களான ராபர்ட் இ. ஹால் (Robert E. Hall) மற்றும் மைக்கேல் வுட்போர்ட் (Michael Woodford) ஆகியோருக்கு 2026 ஆம் ஆண்டுக்கான நோபல் நினைவுப் பரிசை அறிவித்துள்ளது.
இந்த ஆண்டின் நோபல் பரிசு சுழற்சியில் அறிவிக்கப்படும் இறுதி மற்றும் மிக முக்கியமான விருது இதுவாகும். மேக்ரோ எகனாமிக் ஸ்திரத்தன்மைக்கான நுண் பொருளியல் அடித்தளங்களை உருவாக்கியதற்காக” இவ்விருது இவர்களுக்கு வழங்கப்படுகிறது.
ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளையும் சீரற்ற நிலைகளையும் கட்டுப்படுத்தி ஸ்திரத்தன்மையை உருவாக்க நிதிக் கொள்கைகள் (Fiscal Policy) மற்றும் பணவியல் கொள்கைகள் (Monetary Policy) எவ்வாறு செயல்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான புதிய பொருளாதார மாதிரிகளை (Macroeconomic Models) இவர்கள் உருவாக்கியுள்ளனர்
இவ்விருது முறையான பெயர் மறைந்த மாபெரும் அறிவியலாளர் மற்றும் வர்த்தகரான ஆல்பிரெட் நோபலின் நினைவாக ஸ்வீடனின் மத்திய வங்கியின் பொருளாதார அறிவியல் பரிசு’ என்பதாகும்.
BREAKING NEWS
The Royal Swedish Academy of Sciences has decided to award the 2026 Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel to Robert E. Hall and Michael Woodford “for microeconomic foundations of macroeconomic stabilisation.”
#NobelPrize https://t.co/2i7ktB1Q2b— The Nobel Prize (@NobelPrize) October 12, 2026
ஆல்பிரெட் நோபலின் மறைவு தினமான டிசம்பர் 10 ஆம் தேதி அன்று இதர நோபல் பரிசுகளுடன் இந்த விருதும் அதிகாரப்பூர்வமாக வழங்கப்படவுள்ளது. இந்த ஆண்டிற்கான பரிசுத் தொகையாக 12 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனார் (சுமார் 1.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு புதிய தயாரிப்புகள் மற்றும் நவீனப்படுத்துதல் எவ்வாறு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன என்பதை விளக்கிய மூன்று ஆராய்ச்சியாளர்களுக்கு இப்பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு உலகளாவிய பொருளாதார நிபுணர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

