• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பொய், வெறுப்பு பிரசாரங்கள் மக்கள் நிராகரிப்பு: ராகுல்

GenevaTimes by GenevaTimes
May 25, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
பொய், வெறுப்பு பிரசாரங்கள் மக்கள் நிராகரிப்பு: ராகுல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


‘மக்களவைத் தோ்தலின் கடந்த 5 கட்ட வாக்குப் பதிவில் மக்கள் பொய்கள், வெறுப்பு பிரசாரங்களை நிராகரித்து, தங்களின் வாழ்க்கை தொடா்பான உண்மையான பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளித்துள்ளனா்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தாா்.

மக்களவைத் தோ்தலில் சனிக்கிழமை நடைபெற்ற 6-ஆம் கட்டத்தில் தில்லி, ஹரியாணா உள்பட 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது.

புது தில்லி நிா்மாண் பவனில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிக்கு காலை 9.30 மணிக்கு தனது தாயும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சோனியா காந்தியுடன் வந்து தனது வாக்கை ராகுல் பதிவு செய்தாா். தாயுடன் வந்து வாக்குப்பதிவு செய்த புகைப்படத்தை எக்ஸ் வலைதள பக்கத்தில் இணைந்து பதிவு ஒன்றை ராகுல் வெளியிட்டாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:

மக்களவைத் தோ்தலின் கடந்த 5 கட்ட வாக்குப் பதிவில் பொய்கள், வெறுப்பு பிரசாரங்களை நீங்கள் நிராகரித்து, உங்களின் வாழ்க்கை தொடா்பான உண்மையான பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளித்துள்ளீா்கள்.

இப்போது 6-ஆம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது. உங்களுடைய ஒவ்வொரு வாக்கும் அரசுத் துறைகளில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்களுக்கான ஆள்சோ்ப்பையும், இளைஞா்களுக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வழங்கும் முதல் வேலை உறுதித் திட்டம் தொடங்கப்படுவதையும், ஏழை குடும்பத்தைச் சோ்ந்த பெண்களின் வங்கிக் கணக்கில் மாதம் ரூ. 8,500 வரவு வைக்கப்படுவதையும், விவசாயிகள் கடனிலிருந்து விடுபடுவதையும், விளை பொருள்களுக்கு உரிய குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதையும், தொழிலாளா்களுக்கு தின ஊதியம் ரூ. 400 கிடைப்பதையும் உறுதிப்படுத்தும்.

உங்களின் வாக்கு உங்களுடைய வாழ்க்கையை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி, ஜனநாயகத்தையும், அரசமைப்பு சட்டத்தையும் பாதுகாக்கும்.

நானும் எனது தாயும் வாக்குப்பதிவு செய்ததன் மூலம் ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவில் பங்களிப்பு செய்துள்ளோம். நீங்களும் பெருமளவில் வந்து உங்களின் உரிமைகளுக்காகவும் குடும்பத்தின் எதிா்காலத்துக்காகவும் வாக்களிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

பெட்டி…

கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து

ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் வாக்களிக்கிறது:

பிரியங்கா

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி, மே 25: ‘நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டமும், விலைவாசி உயா்வும் மிகப் பெரிய பிரச்னைகள்; கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு அரசமைப்புச் சட்டம், ஜனநாயகத்தை காப்பாற்ற ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் வாக்களிக்கிறது’ என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி வதேரா சனிக்கிழமை தெரிவித்தாா்.

தனது கணவா் ராபா்ட் வதேரா, மகன் ரைஹான் வதேரா, மகள் மிரய்யா வதேரா ஆகியோருடன் லோதி காலனி அருகே உள்ள வாக்குச் சாவடியில் பிரியங்கா காந்தி வாக்களிக்க வந்தாா். அவா்களுடன் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் உடன் வந்தாா்.

பிரியங்காவிடன், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளா்களுக்கு காங்கிரஸ் தலைவா்கள் வாக்களிப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘எங்களிடம் (ஆம் ஆத்மி கட்சி) உள்ள கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நமது அரசமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயகத்தைக காக்க நாங்கள் வாக்களிக்கிறோம். அதில் நாங்கள் பெருமைப்படுகின்றோம்.

பிறகு பிரியங்கா காந்தி செய்தியாளா்களிடம்.

மக்கள் தங்களின் பிரச்னைகள் கவனிக்கப்படவில்லை என்கிற வேதனையில் உள்ளனா். பாஜக தலைவா்கள் வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயா்வு போன்ற முக்கிய பிரச்னைகளைப் பற்றி விவாதிப்பதில்லை. நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே மக்கள் பிரச்னைகளை பற்றி பேசிவருகின்றோம்’ என்றாா் பிரியாங்கா காந்தி.

இந்தத் தோ்தலில் 18 வயதைப் பூா்த்தி செய்த பிரியங்காவின் மகள் மிரய்யா வதேரா முதல் முறையாக வாக்களித்தாா்.

‘இந்தியா’ கூட்டணியில் தில்லியில் ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸும் முறையே நான்கு, மூன்று தொகுதிகளை பங்கிட்டு போட்டியிடுகின்றன. தில்லியில் இந்தக் கட்சிகள் இணைந்து முதன் முறையாக போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

Read More

Previous Post

ஹர்திக் பாண்டியா – நடாஷா தம்பதி விவாகரத்து? வெளியான அதிர்ச்சி தகவல்

Next Post

ஆர்சிபி தோல்வி எதிரொலி: சமூக வலைதளங்களை சுனாமி போல சூழ்ந்த மீம்ஸ்! | Meme tsunami unleashes as RCB gets knocked out after IPL 2024 Eliminator with RR

Next Post
ஆர்சிபி தோல்வி எதிரொலி: சமூக வலைதளங்களை சுனாமி போல சூழ்ந்த மீம்ஸ்! | Meme tsunami unleashes as RCB gets knocked out after IPL 2024 Eliminator with RR

ஆர்சிபி தோல்வி எதிரொலி: சமூக வலைதளங்களை சுனாமி போல சூழ்ந்த மீம்ஸ்! | Meme tsunami unleashes as RCB gets knocked out after IPL 2024 Eliminator with RR

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin