Last Updated:
லக்னோவில், சொத்து தகராறில் பொய் வழக்குகள் தொடுத்த பரமானந்த குப்தா வழக்கறிஞருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து, தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டது.
உத்தரப்பிரதேசத்தில், சொத்து தகராறு காரணமாக, இளம்பெண் மூலம் பக்கத்து வீட்டுக்காரர் மீது பொய் வழக்குகளை தொடுத்த வழக்கறிஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லக்னோவை சேர்ந்த வழக்கறிஞர் பரமானந்த குப்தா என்பவருக்கும், அவரது பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே சொத்து தகராறு இருந்தது. இதனால், பக்கத்து வீட்டுக்காரர் மீது இளம் பெண் ஒருவர் மூலம் பாலியல் புகார் உட்பட 11 வழக்குகளையும், தனது பெயரில் 18 வழக்குகளையும் வழக்கறிஞர் பரமானந்த குப்தா தொடுத்துள்ளார்.
இந்த புகார்கள் தொடர்பாக, பக்கத்து வீட்டுக்காரர், லக்னா உயர்நீதிமன்றத்தை அணுகிய நிலையில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
விசாரணையில், புகார்கள் அனைத்தும் பொய்யானவை என்பது நிரூபிக்கப்பட்டதை அடுத்து, வழக்கறிஞருக்கு ஆயுள் தண்டனை விதித்த லக்னோ உயர்நீதிமன்றம், 5 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.
மேலும், பரமானந்த குப்தா வழக்கறிஞர் தொழில் செய்யவும் தடை விதித்த உயர்நீதிமன்றம், இளம்பெண்ணுக்கு நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு வழங்கி உத்தரவிட்டது.
Lucknow,Uttar Pradesh
August 21, 2025 1:26 PM IST


