இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கல்விச் சீர்திருத்தங்கள் எவ்வித
முறையான திட்டமிடலும் இன்றி, தன்னிச்சையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின்
குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத்
தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, “நாட்டில் தற்போது கல்விச் சீர்திருத்தத்துக்காக 5 பிரத்தியேகக் குழுக்கள்
நியமிக்கப்பட்டு ஆலோசனைகள் தொடர்ந்து பெறப்பட்டு வருகின்றன.
மாற வேண்டிய பாடத்திட்டங்கள்
எனினும், தற்போதைய
திட்டங்களின் தெளிவற்ற தன்மையே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முதன்மைக்
காரணமாக அமைந்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டிலும் பாடத்திட்டங்கள் மாற்றமடையும் எனக் கூறப்பட்ட
போதிலும், இதுவரை எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை.
வருடங்கள் கடந்தும் கல்வி
முறையில் உண்மையாகவே மாற வேண்டிய பாடத்திட்டங்கள் இன்னும் அப்படியேதான்
இருக்கின்றன.
ஜனாதிபதி செயலாளரின் கலந்துரையாடலைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ
ஊடக அறிக்கையில், நாட்டில் உள்ள 6500 பாடசாலைகளில் தேவையான வசதிகள்
முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தத் தகவல்
முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.
நாட்டில் உள்ள 10 ஆயிரத்து 100 மொத்தப்
பாடசாலைகளில், குறைந்தபட்சம் 500 பாடசாலைகளிலாவது இந்த வசதிகள் உண்மையாகவே
முழுமைப்படுத்தப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகின்றது.
அடிப்படை உட்கட்டமைப்பு வசதி
மேலும், 373 பாடசாலைகளை இந்தச் சீர்திருத்தங்களுக்காக அபிவிருத்தி செய்யப்
போவதாக அரசு அறிவித்துள்ளது.

வெறும் வாய்மொழி மற்றும் எழுத்துபூர்வ அறிக்கைகள்
மூலமாக மட்டும் கல்விச் சீர்திருத்தங்களுக்குத் தேவையான அடிப்படை
உட்கட்டமைப்பு வசதிகளை ஒருபோதும் பூர்த்தி செய்துவிட முடியாது.
தற்போதைய பாடசாலைக் கல்வி முறையில் நிலவும் உண்மையான நெருக்கடிகளுக்குத்
தகுந்த தீர்வுகளை வழங்குவதே ஒரு கல்விச் சீர்திருத்தத்தின் முதன்மை நோக்கமாக
இருக்க வேண்டும்.
எனினும், தற்போதைய சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் அத்தகைய
தீர்வுகள் எவையும் கிடைக்கப் போவதில்லை என்பது தெளிவாகின்றது.
கடந்த காலங்களில் செயற்படுத்த முயன்ற திட்டங்களும் எவ்வித திட்டமிடலும்
இன்றியே ஆரம்பிக்கப்பட்டமையால் தோல்வியடைந்தன.
எனவே, மாணவர்களின் எதிர்கால
நலனைக் கருத்திற்கொண்டு, தொலைநோக்குப் பார்வை கொண்ட கல்விச் சீர்திருத்தமொன்றை
அவசரமாகச் செயற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

