பொத்துவில் மறுவடிவம் அறக்கட்டளை அமைப்பின் ஐந்து வருட பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்த ‘மனித நேயத்திற்கான சமூகப்பணி’ எனும் தொனிப்பொருளில் முப்பெரும் விழா கடந்த சனிக்கிழமை அமைப்பின் தலைவர் எம்.பி.முபாரக் தலைமையில் பொத்துவில் களப்புக்கட்டு வாசிகசாலை சிறுவர் பூங்காவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் கலை நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதன் போது கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், முன்பள்ளி ஆசிரியைகள் கெளரவிக்கப்பட்டனர்.
பொத்துவில் பிரதேசத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் கடமையாற்றி வருகின்ற முஅத்தீன்களின் பணிகளை பாராட்டி விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன. சமூகப் பணியாளர்களின் சமூக சேவைகளை பாராட்டி பொன்னாடை போத்தி விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
The post பொத்துவிலில் முப்பெரும் விழா appeared first on Thinakaran.

&w=1200&resize=1200,675&ssl=1)