சிங்கப்பூர்: அங் மோ கியோவில் உள்ள பொது வெளியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மது போதையில் இருந்த ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சரியாக, பிளாக் 407 ஆங் மோ கியோ அவென்யூ 10 இல் அவர் காணப்பட்டதாகவும், பின்னர் காவல்துறையினர் அழைக்கப்பட்டு 39 வயதுமிக்க அந்த நபர் கைது செய்யப்பட்டார் என்றும் Stomp தளம் குறிப்பிட்டுள்ளது.
லிட்டில் இந்தியாவில் காவலரை கேலி கிண்டல் செய்த மூவருக்கு அபராதம் – வீடியோ எடுத்தவருக்கும் செக்!
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியை நடத்தும் சிங்கப்பூரருக்கு S$7,000 அபராதம்
“அவர் கடும் மது போதையில் இருப்பது போல் தெரிந்தது” என்று அதன் வாசகர் அந்த தளத்துடன் பகிர்ந்து கொண்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களில், காவல்துறை அதிகாரிகள் பலர் போது வெளியில் ஆடவர் ஒருவருடன் உரையாடுவதைக் காணலாம்.
பிற்பகல் 3.55 மணிவாக்கில் உதவி வேண்டும் என்று அப்பகுதியில் இருந்து காவல்துறையினருக்கு அழைப்பு வந்ததாக கூறப்பட்டுள்ளது.
“பொது வெளியில் மது போதையில் இருந்ததற்காக 39 வயதுமிக்க ஆடவர் கைது செய்யப்பட்டார்,” என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
காவல்துறை விசாரணைகள் தொடர்கின்றன.
கழிவறையில் ஆடவரிடம் தகாத முறையில் நடந்துகொண்ட இந்தியருக்கு சிறை, பிரம்படி

