ஈரான் போரின் தொடக்கத்தில் அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களில் காயமடைந்ததிலிருந்து தலைமறைவாக இருந்துவரும் ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி, அடுத்த வாரம் தெஹ்ரானில் தனது தந்தை அயதுல்லா அலி கமெனிக்கான நினைவேந்தல் விழாவில் பொதுவெளியில் தோன்றக்கூடும்.என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் பல வாரங்களாக பொதுவெளியில் தோன்றுவதை தவிர்த்து வந்தார். பொதுவெளியில் தோன்றாமல் டெலிகிராம் மற்றும் அரசு ஊடகங்களில் எழுத்து பூர்வமான அறிக்கைகள் வாயிலாக மட்டுமே தனது உத்தரவுகளை பிறப்பித்து இருந்தார்.
கமெனி இறுதி சடங்கில் கூட மொஜ்தபா பங்கேற்கவில்லை
சமீபத்தில் நடந்த தந்தை கமெனி இறுதி சடங்கில் கூட மொஜ்தபா பங்கேற்கவில்லை. பாதுகாப்பு காரணங்களால் அவர் பங்கேற்கவில்லை என்று ஈரான் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அவர் நேரில் பங்கேற்பாரா
இந்தநிலையில் வரும் 23-ம் திகதி மாலை 5 மணிக்கு தலைநகர் தெஹ்ரானில் கமெனி நினைவேந்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மொஜ்தபா கமெனி பங்கேற்பார் என்று ஈரான் அரசு அறிவித்து உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் அவர் நேரில் பங்கேற்பாரா? அல்லது காணொளி உரையாடல் மூலம் பங்கேற்பாரா? என்பது குறித்த விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

