Singapore: செம்பவாங் கிரசென்ட்டில் பொது வெளியில் ஆடவர் ஒருவர் சிறுநீர் கழிப்பதைப் பார்த்த குடியிருப்பாளர் அருவருப்பான செயல் என கூறியுள்ளார்.
கடந்த ஜூலை 23 ஆம் தேதி இரவு 10.21 மணிக்கு பொது வெளியில் சிறுநீர் கழிக்கும் ஆடவரின் புகைப்படங்களை Stomp வாசகர் பகிர்ந்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து கூறிய வாசகர், “அவர் மது போதையில் இருந்ததாகவும், பின்னர் பொது வெளியில் வெளிப்படையாக சிறுநீர் கழித்தார் என்றும் சொன்னார்.
இந்த செயலை ஒரு பெண் அல்லது சிறுமி பார்த்திருந்தால் என்ன செய்வது? இது மிகவும் அருவருப்பான ஒன்று என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான செயல்களை கடுமையாக எடுத்துக்கொள்வதாக செம்பவாங் நகர கவுன்சில் செய்தித் தொடர்பாளர் பதிலளித்ததாக Stomp கூறியுள்ளது.
இதுபோன்ற அநாகரிகமான செயல்கள் குறித்து நேரடியாக காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் என்றும் குடியிருப்பாளர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
அனைத்து குடியிருப்பாளர்களும் சமூகப் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
Source: Stomp