Last Updated:
ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் தீவிரம்; ரேசா பஹ்லவி மக்கள் வீதிகளில் தொடர வேண்டும் என அழைப்பு, டிரம்ப் ஆதரவு, பாதுகாப்பு படையினர் பணி இடம் விட்டு வெளியேறினர்.
ஈரானில் அரசுக்கு எதிராக நடத்தி வரும் போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் மக்கள் வீதிகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் நாடு கடத்தப்பட்ட அந்நாட்டு பட்டத்து இளவரசர் ரேசா பஹ்லவி அழைப்பு விடுத்துள்ளார்.
இஸ்ரேலுடன் கடந்த ஆண்டு ஏற்பட்ட போர் காரணமாக கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள ஈரானில், அரசுக்கு எதிராக மக்கள் இரண்டு வாரங்களாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில், போராட்டத்தை தீவிரப்படுத்தும்படி ஈரானின் நாடு கடத்தப்பட்ட பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி அழைப்பு விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், மக்களின் தொடர் போராட்டம் அயதுல்லா கமேனி அரசின் அடக்குமுறை இயந்திரத்தை பலவீனப்படுத்திவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு படையினர் தங்களது பணி இடங்களில் இருந்து வெளியேறியுள்ளதாகவும், மக்களின் போராட்டத்தை ஒடுக்கும் உத்தரவை மீறியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரான் மக்களுக்கு உதவுவதாக உறுதியளித்திருப்பதாகவும், போராட்டக்காரர்கள் ஈரானை கைப்பற்றுவார்கள் என்றும் கூறியுள்ள பட்டத்து இளவரசர் ரேசா பஹ்லவி, தான் விரைவில் ஈரான் திரும்ப இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


