• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பொதுமக்களுக்கு வழங்கும் நம்ப முடியாத ரிட்டன்கள்! – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
June 18, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
பொதுமக்களுக்கு வழங்கும் நம்ப முடியாத ரிட்டன்கள்! – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நமது முதலீட்டிற்கு உறுதியளிக்கப்பட்ட ரிட்டன்களை பெறும் அதே வேளையில் நமது டெபாசிட்களுக்கான வரியை சேமிக்க வேண்டும் என்பது பல முதலீட்டாளர்களின் எண்ணமாக இருக்கிறது. இது ஒருவருடைய வருமானத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் வரிப்பணத்தை சேமிப்பதற்கு உதவுவதால் சிறந்த முதலீட்டு ஆப்ஷனாக கருதப்படுகிறது.

இது மாதிரியான வசதி குறைந்தபட்சம் 5 வருடங்கள் லாக்-இன் பீரியட் கொண்ட சந்தையுடன் இணைக்கப்படாத திட்டங்களுடன் வருகிறது. SBI 5- வருட வரி சேமிப்பு FD என்பது உறுதியளிக்கப்பட்ட ரிட்டன் மற்றும் டெபாசிட்களுக்கான வரிவிலக்கு தரக்கூடிய அப்படியான ஒரு திட்டமாகும்.

விளம்பரம்

ஒரு குறிப்பிட்ட நிதியாண்டில் நீங்கள் வருட ஃபிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்யும் பொழுது அதற்கு 1.50 லட்சம் ரூபாய் வரையிலான வரி சேமிப்பை கிளைம் செய்யலாம். இந்த ஃபிக்சட் டெபாசிட் திட்டம் 5 வருடங்கள் லாக்-இன் பீரியட் கொண்டுள்ளது. 5- வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டம் பொதுமக்கள் மற்றும் சீனியர் சிட்டிசன்கள் ஆகிய இருவருக்கும் கிடைக்கிறது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வழங்கும் இந்த 5-வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் பொதுமக்களுக்கு ஒரு ஆண்டுக்கு 6.50 சதவீத வட்டி கிடைக்கிறது. அதே நேரத்தில் சீனியர் சிட்டிசன்கள் சற்று கூடுதலாக 7.50 சதவீத வட்டி வரை ஒரு ஆண்டுக்கு பெற்றுக் கொள்ளலாம்.

விளம்பரம்

5- வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் பொதுமக்கள் மற்றும் சீனியர் சிட்டிசன்கள் 50,000 ரூபாய், 100,000 ரூபாய், 150,000 ரூபாய், மற்றும் 200,000 ரூபாய் முதலீடுகளை செய்தால் மெச்சூரிட்டியின் பொழுது கிடைக்கக்கூடிய தொகை எவ்வளவு என்பதை இப்பொழுது தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் அதற்கு முன்பாக SBI வரி சேமிப்பு 5-வருட FD பற்றிய ஒரு சில தகவல்களைப் பற்றி பார்ப்போம்.

SBI 5-வருட வரி சேமிப்பு FD

இந்த FD இரண்டு வகையான அக்கவுண்டுகளை வழங்குகிறது: டெர்ம் டெபாசிட் (TD) அக்கவுண்ட் மற்றும் ஸ்பெஷல் டெர்ம் டெபாசிட் (STD) அக்கவுண்ட். இதில் டெபாசிட் செய்வதற்கான குறைந்தபட்ச கால அளவு 5 வருடங்கள் மற்றும் அதிகபட்ச கால அளவு 10 வருடங்களாக உள்ளது. பொதுமக்கள் இந்த ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் குறைந்தபட்சமாக 1000 ரூபாய் தொகையையும், சீனியர் சிட்டிசன்கள் 10,000 ரூபாய் குறைந்தபட்ச தொகையையும் டெபாசிட் செய்ய வேண்டும்.

விளம்பரம்

அதே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட நிதியாண்டில் அதிகபட்ச டெபாசிட் தொகை 1.50 லட்ச ரூபாயை மிகாமல் இருந்தால் வருமான வரி சட்டத்தில் உள்ள பிரிவு 80C- இன் கீழ் வரி பலன்களை பெற்றுக் கொள்ளலாம். இதற்கான ரிட்டன் வட்டி வடிவில் வழங்கப்படுகிறது. இந்த வட்டி பணத்தை ஒருவர் மாதா மாதமோ, மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது ஆண்டுக்கு ஒரு முறையோ பெற்றுக் கொள்ளலாம். 5- வருட SBI FD திட்டத்தில் லாக்-இன் பீரியட் சமயத்தில் லோன் பெறுவதற்கான வசதி கிடையாது.

விளம்பரம்

ஃபிக்சட் டெபாசிட் அக்கவுண்டிற்கு சொந்தமான நபர் துரதிஷ்டவசமாக இறந்தாலே ஒழிய ஐந்து வருட காலத்திற்கு முன்பாக அதில் டெபாசிட் செய்த பணத்தை எடுக்க முடியாது. ஐந்து வருட காலங்கள் நிறைவான பிறகு அக்கவுண்ட்டை முன்கூட்டியே மூடுவதற்கு வங்கி அனுமதிக்கிறது. SBI 5-வருட வரி சேமிப்பு FD: 50,000 ரூ., 100,000 ரூ., 1,50,000 ரூ. மற்றும் 200,000 ரூபாய் டெபாசிட்களுக்கு எவ்வளவு ரிட்டன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

– 5-வருட FD திட்டத்தில் 50,000 ரூபாய் பணத்தை பொதுமக்கள் முதலீடு செய்யும்பொழுது அதற்கான வட்டி 19,021 ரூபாய் என கணக்கிடப்பட்டு, மொத்த மெச்சூரிட்டி தொகையாக 69,021 ரூபாய் கிடைக்கும்.

விளம்பரம்

– இதுவே 100,000 ரூபாய் முதலீடு செய்தால் வட்டித்தொகை 38,042 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு, இறுதியாக கிடைக்கும் மெச்சூரிட்டி தொகை 1,38,042 ரூபாயாக இருக்கும்.

– 150,000 முதலீட்டிற்கான வட்டி தொகை 57,063 மற்றும் மொத்த மெச்சூரிட்டி தொகை 2,07,063 ரூபாய் ஆகும்.

– 200,000 முதலீட்டிற்கான வட்டி தொகை 76,084 ரூபாயாகவும், மெச்சூரிட்டி தொகை 2,76,084 ரூபாய் கிடைக்கும்.

– இதுவே சீனியர் சிட்டிசன்கள் ஐந்து வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் 50,000 டெபாசிட் செய்யும் பொழுது அதற்கான வட்டி 22,497 ரூபாய் வழங்கப்பட்டு, மெச்சூரிட்டி தொகை 72,497 ரூபாயாக இருக்கும்.

விளம்பரம்

– 100,000 டெபாசிட் செய்தால் வட்டி 44,995 என கணக்கிடப்பட்டு, மெச்சூரிட்டி தொகை 1,44,995 ரூபாயாக கிடைக்கும்.

– 150,000 டெபாசிட் தொகைக்கான வட்டி 67,492 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு, 2,17,492 மெச்சூரிட்டி தொகையாக வழங்கப்படும்.

– 200,000 டெபாசிட் செய்யும் பொழுது அதற்கான வட்டி 89,990 என கணக்கிடப்பட்டு, மெச்சூரிட்டி தொகை 2,89,990 ரூபாயாக கிடைக்கும்.

.

Read More

Previous Post

மீண்டும் தொடங்குகிறது பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி…

Next Post

மலேசியர்களின் உணவில் முட்டையின் முக்கியத்துவமே விலை குறைப்புக்கு காரணம்: பிரதமர் | Makkal Osai

Next Post
மலேசியர்களின் உணவில் முட்டையின் முக்கியத்துவமே விலை குறைப்புக்கு காரணம்: பிரதமர் | Makkal Osai

மலேசியர்களின் உணவில் முட்டையின் முக்கியத்துவமே விலை குறைப்புக்கு காரணம்: பிரதமர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin