கோலாலம்பூர்:
மலேசியத் தலைநகர் பகுதியில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் வசதிக்காக, ‘டிஎன்ஜி இ-வாலட்’ (TnG e-Wallet) செயலி மூலமாகவே நேரடியாக வாங்கிப் பயன்படுத்தக்கூடிய புதிய ‘டிஜிட்டல் ரேபிட் மாதாந்திர பயண அட்டையை’ (Digital Rapid Monthly Pass) ரேபிட் கேஎல் நிறுவனம் அதிரடியாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய டிஜிட்டல் அட்டை மூலம், பயனர்கள் இனி எல்ஆர்டி (LRT), எம்ஆர்டி (MRT), மோனோரயில் (Monorail), சன்வே பிஆர்டி (Sunway BRT) மற்றும் ரேபிட் கேஎல் பேருந்துகளில் 30 நாட்களுக்கு வரம்பற்ற முறையில் (Unlimited) தங்கு தடையின்றி பயணம் செய்ய முடியும்.
150 ரிங்கிட் விலையிலான இந்த நவீன டிஜிட்டல் பயண அட்டையைப் பெற்றுப் பயன்படுத்த, பயனர்களின் ஸ்மார்ட்போன்களில் என்எஃப்சி (NFC) தொழில்நுட்ப வசதி இருக்க வேண்டும். மேலும், தங்களது டிஎன்ஜி செயலியை அண்மையப் பதிப்பிற்கு (Latest Version) புதுப்பித்திருக்க வேண்டும் என்பதும் அவசியமாகும்.
அதேவேளையில், வழக்கமான முறையில் நாடாளுமன்ற அல்லது இரயில் நிலைய முகப்பிடங்களுக்கு (Counters) நேரில் சென்று பயண அட்டையை வாங்க விரும்பும் பயணிகளுக்காக, நிலையங்களில் உள்ள வழக்காமான சேவை மையங்களும் வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும் என ரேபிட் கேஎல் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.



