2006ஆம் ஆண்டு மெல்போர்ன் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் பழுதூக்கும் வீரர் சிந்தன விதானகே தங்கம் வென்ற பிறகு, இலங்கை பெறும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.
பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கை வீரர் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார்.
இதன்மூலம் பொதுநலவாய போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்வதற்காக இலங்கை கடந்த 20 ஆண்டுகளாக காத்திருந்த நிலையை அவர் முடிவுக்குக் கொண்டுவந்துள்ளார்.
இந்தப் போட்டியில் ருமேஷ் தரங்க 89.75 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து தனது மிகச்சிறந்த திறமையை வெளிப்படுத்தினார்.
இலங்கை நேரப்படி, இன்று சனிக்கிழமை (01) காலை இப்போட்டி நிறைவடைந்தது.
இந்தியாவின் ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா உள்ளிட்ட பல முன்னணி வீரர்களுக்கு எதிராகப் போட்டியிட்டு, அவர் இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
? Rumesh Tharanga ?? – 89.75m
? Neeraj Chopra ?? – 85.83m
? Yash Vir Singh ?? – 85.41m
2006ஆம் ஆண்டு மெல்போர்ன் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் பழுதூக்கும் வீரர் சிந்தன விதானகே தங்கம் வென்ற பிறகு, இலங்கை பெறும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.
அத்துடன், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் வரலாற்றில் இலங்கை வெல்லும் ஐந்தாவது தங்கப் பதக்கம் இதுவாகும்.
சர்வதேச தடகளப் போட்டிகளில் இலங்கையின் மிகச்சிறந்த சாதனைகளில் ஒன்றாக ருமேஷ் தரங்கவின் இந்த வெற்றி கருதப்படுகிறது.


