Last Updated:
பொங்கல் பண்டிகை மற்றும் கோவில் விசேஷங்களை முன்னிட்டு பூக்களுக்கு தேவையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, மல்லிகை, சம்பங்கி, ரோஜா உள்ளிட்ட பூக்களின் விலை வழக்கத்தை விட இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பூக்கள் அனுப்பப்படும் முக்கிய மையமாக விளங்கும் தோவாளை மலர் சந்தைக்கு பெங்களூர், ஓசூர், மதுரை, திண்டுக்கல், நெல்லை போன்ற பிற மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு டன் கணக்கில் கொண்டுவரப்படும்.
அதேபோல குமாரபுரம், தோப்பூர், ஆரல்வாய்மொழி, செண்பகராமன் புதூர் போன்ற உள்ளூர் பகுதிகளிலிருந்தும் பூக்கள் விற்பனைக்காக தோவாளை மலர் சந்தைக்கு விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகிறது.
பொங்கல் பண்டிகை மற்றும் கோவில் விசேஷங்களை முன்னிட்டு பூக்களுக்கு தேவையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, மல்லிகை, சம்பங்கி, ரோஜா உள்ளிட்ட பூக்களின் விலை வழக்கத்தை விட இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.
குறிப்பாக இன்றைய விலை நிலவரப்படி மல்லி பூ – 3500, பிச்சிப்பூ – 2150, அரளி பூ – 270, வாடா மல்லி – 100, கேந்தி – 50, சம்பங்கி – 150, முல்லை – 2000, ரோஸ் – 150, ஸ்டம்ப் ரோஸ் – 300, துளசி – 60, தாமரை – 10, மரிக்கொழுந்து – 150, செவ்வந்தி – 150 விற்பனை செய்யப்படுகின்றன.
பண்டிகை காலங்களில் வீடுகள், கோவில்கள், வாகனங்கள் அலங்கரிக்க பூக்கள் அதிகம் தேவைப்படுவதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும், இதே விலை இன்னும் சில நாட்கள் தொடர வாய்ப்புள்ளதாகவும் பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர் பூக்களின் விலை படிப்படியாக குறையும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Kanniyakumari,Tamil Nadu

