• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பைக் டாக்ஸியில் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. நடுரோட்டில் விட்டு சென்ற ஓட்டுநர் – கலங்கவைக்கும் பதிவு | இந்தியா

GenevaTimes by GenevaTimes
November 13, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
பைக் டாக்ஸியில் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. நடுரோட்டில் விட்டு சென்ற ஓட்டுநர் – கலங்கவைக்கும் பதிவு | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 13, 2025 6:56 PM IST

டெல்லி பிரக்யா அரோரா தனது 19 வயது சகோதரி உபர் விபத்தில் பலத்த காயம் அடைந்ததாக லிங்க்ட்இனில் பகிர்ந்தார். உபர் பாதுகாப்பு குறைவு குறித்து விமர்சனம் எழுப்பினார்.

ஒவ்வொரு நாளும், இந்திய நகரங்களில் எண்ணற்ற மக்கள் பாதுகாப்பானது என நினைத்து கேப்-ஐ புக் செய்கிறார்கள். பலருக்கு, குறிப்பாக பெண்களை பொறுத்தவரை, கேப் பயணமானது பொதுப் போக்குவரத்தால் வழங்கப்படாத ஆறுதலையும், பாதுகாப்பையும் வழங்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அந்த நம்பிக்கையை உடைக்கும் வகையில் சமீப காலமாக பல சம்பவங்கள் வெளிவருகின்றன.

இந்நிலையில் டெல்லியைச் சேர்ந்த பிரக்யா அரோரா என்ற பெண், இதுபோன்ற ஒரு பயங்கரமான அனுபவத்தை லிங்க்ட்இன் இல் பதிவிட்டுள்ளார். அதில், உபர் ஓட்டுநர் ஒரு பேருந்தில் மோதி விபத்தை ஏற்படுத்தியதை அடுத்து தப்பிச் சென்றுள்ளார். இந்த விபத்தில் தனது 19 வயது சகோதரிக்கு ஐந்து முதுகெலும்பு முறிவுகள், இரண்டு கழுத்து முறிவுகள் மற்றும் PCL கிழிந்ததாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவில் கூறியதாவது, என் சகோதரி காலை 8 மணிக்கு உபர் காரில் ஏறினார். பீக் ஹவர்ஸில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் போன்ற காரணங்களால் பாதுகாப்பானது மற்றும் விரைவானது என நம்பி மில்லியன் கணக்கான மக்கள் தினமும் கேப்-ஐ புக் செய்வது போல, என் சகோதரியும் புக் செய்தார். ஆனால் அவளுடைய கேப் ஓட்டுநர் குடிபோதை அல்லது தூக்கமின்மையால் ஒரு பேருந்தின் மீது மோதினார். இதனையடுத்து அவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்தில் காயமடைந்த என் சகோதரிக்கு அவர் உதவவில்லை. காயமடைந்த அவரை சாலையில் தனியாக விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார், என்று அவர் பதிவிட்டிருந்தார்.

யாரோ ஒருவர் தனது சகோதரியை மருத்துவமனைக்கு அழைத்து வந்ததாகவும், அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், என் தங்கைக்கு ஐந்து முதுகெலும்பு முறிவுகள், இரண்டு கழுத்து முறிவுகள் மற்றும் PCL கிழிந்திரிப்பதாக கூறியதாகவும் அரோரா கூறியுள்ளார். மேலும் அவர், தனது சகோதரிக்கு முழங்கால் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பிரக்யா அரோரா தனது சகோதரியின் பாதுகாப்பு குறித்து உணர்ச்சிபூர்வமான பதிவை மட்டும் பகிர்ந்து கொள்ளவில்லை, உபரின் பாதுகாப்பு மற்றும் பொறுப்புணர்வு இல்லாமை குறித்து அவர் விமர்சித்துள்ளார். அதாவது, என் சகோதரி கற்பனை செய்ய முடியாத வேதனையில் இருக்கிறார். உங்கள் பொறுப்பு எங்கே? உங்கள் ‘பாதுகாப்பு வாக்குறுதி’ எங்கே?” என்று அவர் உபர் நிறுவனத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த சம்பவம் உங்கள் அலட்சியத்தின் சான்றாகும். இந்த விஷயத்தில் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். இப்போது என் கவனம் முழுவதும் என் சகோதரியை வீட்டிற்கு அழைத்துச் செல்வதில் தான் உள்ளது. ஆனால் அவள் குணமடைந்தவுடன் உங்கள் நிறுவனத்தின் மீது சட்ட ரீதியாக வழக்கு தொடரப்படும். காத்திருந்து பாருங்கள், என்று எச்சரித்துள்ளார்.

இந்த விபத்தை அடுத்து நிறுவனம் இன்னும் எங்களைத் தொடர்பு கொள்ளவில்லை என்றும் அரோரா கூறியுள்ளார். இதுகுறித்து அவர், உங்கள் வாடிக்கையாளரின் உடல்நிலை பற்றி விசாரிக்க நீங்கள் ஒரு முறை கூட எங்களைத் தொடர்பு கொள்ளவில்லை, ஆனால் எனது காலுக்காக உங்கள் நாட்களை எண்ணிக் கொண்டிருங்கள். நான் விரைவில் உங்களைத் தொடர்பு கொள்வேன், மேலும் நீங்கள் என் 19 வயது சகோதரிக்கு ஏற்படுத்திய வலியும், வேதனையும் உங்கள் நிறுவனத்தில் பிரதிபலிக்கும், என்று அவர் எச்சரித்துள்ளார். தற்போது வரை, உபர் நிறுவனம் இந்த வைரல் பதிவுக்கு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 13, 2025 6:56 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

பைக் டாக்ஸியில் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. நடுரோட்டில் விட்டு சென்ற ஓட்டுநர் – கலங்கவைக்கும் பதிவு

Read More

Previous Post

500 மீட்டர் தொலைவில் கூரையில் கை

Next Post

மாற்றுத்திறனாளிகள் குடிமைப் பணியில் சேர தேசிய உடற்தகுதி தேர்வை நடத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது – Malaysiakini

Next Post
மாற்றுத்திறனாளிகள் குடிமைப் பணியில் சேர தேசிய உடற்தகுதி தேர்வை நடத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது – Malaysiakini

மாற்றுத்திறனாளிகள் குடிமைப் பணியில் சேர தேசிய உடற்தகுதி தேர்வை நடத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin