• Login
Thursday, October 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பேஸ்லைன் வீதி – கிருலப்பனை வீதி நிர்மாணப் பணிகள் ஏன் தாமதம்? கொழும்பு மாநகர சபை மேயர் விளக்கம்! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
October 27, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
பேஸ்லைன் வீதி – கிருலப்பனை வீதி நிர்மாணப் பணிகள் ஏன் தாமதம்? கொழும்பு மாநகர சபை மேயர் விளக்கம்! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



கொழும்பு பேஸ்லைன் வீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிர்மாணப் பணிகளில் ஏற்பட்டுள்ள தாமதத்துக்கான காரணங்களை கொழும்பு மாநகர சபை விளக்கியுள்ளது.

நிலத்தடியில் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள மின்சாரக் கம்பிகள், நீர் விநியோகக் குழாய்கள் மற்றும் தொலைத்தொடர்பு இணைப்புகளைத் துல்லியமாக அடையாளம் காண்பதில் ஏற்பட்டுள்ள சிரமங்களே நிர்மாணப் பணிகள் தாமதமடைவதற்கான பிரதான காரணம் என கொழும்பு மாநகர மேயர் விராய் கெலி பல்தசார் தெரிவித்துள்ளார்.

பேஸ்லைன் வீதியில் முன்னெடுக்கப்படும் பணிகள், பெரும் கொழும்பு நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவ மேம்பாட்டு முதலீட்டுத் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இரண்டு பாரிய நிலத்தடி கழிவுநீர் வடிகாலமைப்புத் திட்டங்களின் ஒரு பகுதியாகும்.

கிருலப்பனை மற்றும் கிருல–நாரஹேன்பிட்டி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய இந்த இரண்டு திட்டங்களுக்காகவும் மொத்தமாக சுமார் 2,500 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படுவதாக மேயர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் கிருலப்பனை கழிவுநீர் வடிகாலமைப்புத் திட்டத்துக்காக சுமார் 1,450 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இதற்கான நிதியை இலங்கை அரசாங்கம் வழங்குகிறது.

அதேவேளை, கிருல–நாரஹேன்பிட்டி கழிவுநீர் வடிகாலமைப்புத் திட்டத்துக்காக சுமார் 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படுவதுடன், இதற்கு ஐரோப்பிய முதலீட்டு வங்கி நிதியுதவி வழங்குகிறது. 

குடியிருப்புப் பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை நிலத்தடி குழாய்கள் ஊடாகச் சேகரித்து, நீரிறைக்கும் நிலையங்களுக்குக் கொண்டு சென்று உரிய முறையில் முகாமைத்துவம் செய்வதும் பாதுகாப்பாக அகற்றுவதுமே இந்தத் திட்டங்களின் பிரதான நோக்கமாகும்.

எனினும், பேஸ்லைன் வீதியின் நிலத்தடியில் ஏற்கெனவே காணப்படும் பல்வேறு சேவை இணைப்புகளைக் கண்டறிவதில் குறிப்பிடத்தக்க சவால்கள் ஏற்பட்டுள்ளதாக மேயர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மின்சார விநியோகக் கம்பிகள், குடிநீர் விநியோகக் குழாய்கள், தொலைத்தொடர்பு இணைப்புகள் மற்றும் மழைநீர் வடிகாலமைப்புகள் ஆகியவற்றின் அமைவிடங்களைத் துல்லியமாகக் கண்டறிய வேண்டியுள்ளதாக அவர் விளக்கியுள்ளார்.

இதற்காக இலங்கை மின்சார சபை, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, ஸ்ரீலங்கா டெலிகொம், டயலொக் உள்ளிட்ட பல்வேறு சேவை வழங்குநர்களுடன் கொழும்பு மாநகர சபை இணைந்து செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

பல தொழில்நுட்ப முறைகள் பயன்படுத்தப்பட்டபோதிலும், சில நிலத்தடி சேவை இணைப்புகளின் அமைவிடங்களை உறுதிப்படுத்துவதில் தொடர்ந்தும் சிரமங்கள் காணப்படுவதாக மேயர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான இணைப்புகளை முறையாக அடையாளம் காணாமல் நிலத்தை அகழும் பணிகளை முன்னெடுக்க முடியாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஏனெனில், அகழ்வுப் பணிகளின்போது மின்சாரக் கம்பிகள் அல்லது நீர் விநியோகக் குழாய்கள் தற்செயலாகச் சேதமடைந்தால் அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படுவதுடன், பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், பேஸ்லைன் வீதியில் முன்னெடுக்கப்படும் குழாய் அமைக்கும் பணிகளை இவ்வாண்டு டிசெம்பர் மாதத்துக்குள் நிறைவுசெய்ய கொழும்பு மாநகர சபை இலக்கு நிர்ணயித்துள்ளது.

எனினும், ஒட்டுமொத்த கழிவுநீர் வடிகாலமைப்பு அபிவிருத்தித் திட்டங்களின் பணிகள் அதற்குப் பின்னரும் தொடரும் என மேயர் தெளிவுபடுத்தியுள்ளார்.

கிருலப்பனை கழிவுநீர் வடிகாலமைப்புத் திட்டம் கடந்த 2017ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகவும், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக 2022ஆம் ஆண்டு அதன் நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பின்னர் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நிதி மற்றும் கொடுப்பனவு தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டதைத் தொடர்ந்து, 2025 ஒக்டோபர் மாதம் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், நிர்மாணப் பணிகள் இடம்பெறும் பகுதிகளில் வசிக்கும் 26 குடும்பங்கள் பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தற்காலிகமாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

குறிப்பாக கலிங்க மாவத்தை கழிவுநீர் நீரிறைக்கும் நிலையத்தை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களும் இதில் உள்ளடங்குவதாக மேயர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு இடமாற்றப்பட்ட குடும்பங்களுக்கு மாற்று வீடுகளை வாடகைக்குப் பெற்றுக்கொள்வதற்கான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட நிர்மாணப் பணிகள் நிறைவடைந்த பின்னர் அவர்கள் மீண்டும் தமது வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, கிருல–நாரஹேன்பிட்டி கழிவுநீர் வடிகாலமைப்புத் திட்டம் 2028 ஓகஸ்ட் மாதத்துக்குள் நிறைவுசெய்யப்படவுள்ளது.

வீதிகளை அகழ்வதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை ஏற்றுக்கொண்ட மேயர், பொறுமையுடன் ஒத்துழைப்பு வழங்கிவரும் பொதுமக்களுக்கும் வாகன சாரதிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரின் நீண்டகால கழிவுநீர் முகாமைத்துவ வசதிகளை மேம்படுத்துவதற்கு இந்தத் திட்டங்கள் மிகவும் அவசியமானவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Read More

Previous Post

டென்ஷனான கிம் ஜாங் உன்.. தென்கொரியாவுடன் போரை தொடங்கும் வடகொரியா? எல்லையில் குவியும் பீரங்கிகள் | North Korea deploys 3 howitzers spotted closeto the South Korea border

Next Post

பெர்சத்து கட்சி பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என துவான் இப்ராகிம் கருத்து – Malaysiakini

Next Post

பெர்சத்து கட்சி பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என துவான் இப்ராகிம் கருத்து – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin