வாஷிங்டன் ; பேஸ்புக், இன்ஸ்டாகிராம், திரெட்ஸ்’ ஆகிய சமூக ஊடகங்கள், நேற்று இரவு முடங்கியதால் பயனர்கள் அவதி அடைந்தனர். அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து, ‘மெட்டா’ தொழில்நுட்ப குழுமம் இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று இரவு, இந்த குழுமத்துக்குச் சொந்தமான, ‘பேஸ்புக், இன்ஸ்டாகிராம், திரெட்ஸ்’ ஆகிய சமூக ஊடகங்கள் முடங்கின.
இதனால் இவற்றை உலகம் முழுதுமிருந்து பயன்படுத்தும் பயனர்கள் அவதி அடைந்தனர். பெரும்பாலானோரின் சமூக ஊடக கணக்குகள் தானாகவே, ‘லாக் அவுட்’ ஆனது. அதை மீண்டும், ‘லாகின்’ செய்ய முடியாமல் பலரும் சிரமப்பட்டனர். பலர், தங்கள் கணக்குகள், ‘ஹேக்’ செய்யப்பட்டதாக நினைத்து பீதி அடைந்தனர். சில மணி நேரத்துக்கு பின், இந்த பிரச்னை சரி செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த திடீர் முடக்கத்துக்கான காரணம் குறித்து மெட்டா நிறுவனம் விசாரித்து வருகிறது.