• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பேஸ்புக்கில் விளம்பரம் செய்து கோடி கணக்கில் மோசடி.. பீகாரில் இருந்த கும்பலை கைது செய்த போலீசார்!

GenevaTimes by GenevaTimes
June 29, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
பேஸ்புக்கில் விளம்பரம் செய்து கோடி கணக்கில் மோசடி.. பீகாரில் இருந்த கும்பலை கைது செய்த போலீசார்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 29, 2025 9:34 AM IST

Puducherry arrest | புதுச்சேரி இணைய வழி போலீசார் பீகாரில் 50 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்தனர். இந்த கும்பல் 14 மாநிலங்களில் மோசடி செய்தது விசாரணையில் அம்பலம்.

பீகார் கும்பல் கைதுபீகார் கும்பல் கைது
பீகார் கும்பல் கைது

புதுச்சேரி இணைய வழி போலீசார் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட கும்பலை பீகாரின் தலைநகர் பாட்னாவில் கைது செய்தனர்.

இந்த கும்பல் 14 மாநிலங்களில் மோசடி வழக்குகளுக்கு தொடர்புடையது. 2019 முதல் இந்த குழு, பல்வேறு கட்டுமான பொருட்கள் நிறுவனங்களின் பெயர்களில் போலி விளம்பரங்கள் மூலம் 50 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்துள்ளது. விசாரணையில் 5 பேரை கைது செய்து 35 லட்சம் ரூபாய், 40க்கும் மேற்பட்ட மொபைல் போன்கள், லேப்டாப்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

பேஸ்புக்கில் வைசாக் ஸ்டீல், சுவாரி சிமெண்ட் போன்ற நிறுவனங்களின் பெயரில் விளம்பரம் செய்து, குறைந்த விலையில் பொருட்களை வழங்குவதாக நம்ப வைத்து பலரிடமிருந்து பணத்தை பறித்தனர். சேதுராமன் என்பவர் 30.97 லட்சம் ரூபாயை செலுத்திய பிறகு மோசடியில் சிக்கியதை உணர்ந்து புகார் அளித்தார். விசாரணையில் கும்பல் பீகாரில் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பீகாரை சேர்ந்த ராகுல்குமார் சிங், உத்தம் விஷால் குமார், ராயுசன் குமார், அபிஷேக் குமார், தயானந்த் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

இந்த மோசடி கும்பல் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானவர்களை ஏமாற்றி, 32 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்துள்ளது. இதுவரை 52 புகார்கள் பதிவாகி உள்ளன. கைதானவர்கள் பல்வேறு சொகுசு கார்கள், ஆயுதங்கள் கொண்டிருந்தனர். மேலும் விசாரணையில் பல கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

இந்த கும்பல் பல்வேறு குழுக்களாக பிரிந்து செயல்பட்டது. இணைய வழி மோசடியில் குறைந்தபட்சம் 3 லட்சம் ரூபாயிலிருந்து 1.25 கோடி வரை ஏமாற்றி உள்ளனர். இதுவரை 8 மாநில போலீசார் அவர்களைப் பற்றி அறிந்துள்ளனர்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

June 29, 2025 9:34 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

பேஸ்புக்கில் விளம்பரம் செய்து கோடி கணக்கில் மோசடி.. பீகாரில் இருந்த கும்பலை கைது செய்த போலீசார்!

Read More

Previous Post

GMOA தலைவராக மீண்டும் வைத்தியர் சஞ்சீவ தென்னகோன்

Next Post

ஹேசில்வுட் அபார பந்துவீச்சு: பார்படோஸ் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி | Hazlewood s brilliant bowling Australia wins Barbados Test

Next Post
ஹேசில்வுட் அபார பந்துவீச்சு: பார்படோஸ் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி | Hazlewood s brilliant bowling Australia wins Barbados Test

ஹேசில்வுட் அபார பந்துவீச்சு: பார்படோஸ் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி | Hazlewood s brilliant bowling Australia wins Barbados Test

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin