• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பேஸ்புக்கில் பழகிய இளம் பெண்ணை சந்திக்க சென்ற இளைஞருக்கு 13 மணி நேரம் நடந்த கொடூரம் | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 24, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
பேஸ்புக்கில் பழகிய இளம் பெண்ணை சந்திக்க சென்ற இளைஞருக்கு 13 மணி நேரம் நடந்த கொடூரம் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 24, 2025 11:51 AM IST

மௌகஞ்ச் பிப்ராஹியில், Facebook நட்பால் வந்த இளைஞனை பெண்ணின் குடும்பம் 13 மணி நேரம் கட்டிப்போட்டு அடித்தது; வீடியோ வைரல், போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

பாதிக்கப்பட்ட இளைஞரின் வீடியோபாதிக்கப்பட்ட இளைஞரின் வீடியோ
பாதிக்கப்பட்ட இளைஞரின் வீடியோ

பேஸ்புக்கில் நட்பாக பழகிய பெண்ணை சந்திக்க ஒரு இளைஞன் அவரது வீட்டிற்கு சென்றான். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர், அந்த இளைஞனை கட்டிப்போட்டு, 13 மணி நேரம் கொடூரமாக அடித்தனர். இது தொடர்பான பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் மௌகஞ்ச் மாவட்டத்தில் உள்ள பிப்ராஹியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் மௌகஞ்ச் மாவட்டத்தின் பிப்ராஹி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வைகுந்த்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன், மௌகஞ்ச் மாவட்டத்தின் பிப்ராஹியைச் சேர்ந்த ஒரு பெண்ணை ஃபேஸ்புக்கில் சந்தித்தான். இருவருக்கும் இடையே நட்பு மலர்ந்தது. எனவே அவர்கள் இருவரும் தினமும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அந்தப் பெண்ணைச் சந்திக்க வேண்டும் என்ற ஆசை அந்த இளைஞனுக்குள் எழுந்தது.

இதன் காரணமாக, சனிக்கிழமை இரவு அவர் வசிக்கும் இடத்திலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அப்பெண்ணின் வீட்டை அடைந்தார். இதனை அறிந்த அப்பெண்ணின் குடும்பத்தினர் அவரை மடக்கி பிடித்தனர். மேலும், அவரது கைகளையும் கால்களையும் கயிறுகளால் கட்டி, ஒரே இடத்தில் உட்கார வைத்து, கொடூரமாக அடித்தனர். அதாவது சனிக்கிழமை இரவு 9 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி வரை, அவரது கைகளையும் கால்களையும் கட்டி 13 மணி நேரம் அடித்தனர். இளைஞனை அடிக்கும் முழு சம்பவத்தையும் பெண்ணின் குடும்பத்தினர் மொபைல் போனில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களையும் எடுத்தனர். பின்னர், அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

காவல்துறையினரின் கூற்றுப்படி, பைகுந்த்பூரைச் சேர்ந்த அந்த சிறுவன், பேஸ்புக்கில் நட்பாகப் பழகி, மைனர் பெண்ணைச் சந்திக்க வந்திருந்தார். இதனை கண்ட அப்பெண்ணின் குடும்பத்தினர் அந்த இளைஞனை தாக்கினர் என்று கூறியுள்ளனர். ஆனால் இதுவரை, ஹன்மனா காவல் நிலையத்தில் எந்தப் புகாரும் பதிவு செய்யப்படவில்லை. இருப்பினும், சம்பவம் குறித்த முழுமையான தகவல்களைச் சேகரித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு காவல் நிலையப் பொறுப்பாளருக்கு நாங்கள் உத்தரவிட்டுள்ளோம் என்று போலீஸ் அதிகாரி கூறியுள்ளார். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுதவிர கடந்த ஜூலை மாதம் மத்தியப் பிரதேசத்தில் மற்றொரு சம்பவம் நடந்தது. அதில் சத்தர்பூர் மாவட்டத்தில் 42 வயதுடைய நபரின் கால்நடைகள், மற்றொரு குடும்பத்தின் பண்ணைக்குள் நுழைந்து. இதனால் ஆத்திரமடைந்த அந்த பண்ணையை சேர்ந்தவர்கள், அந்த நபரை மரத்தில் கட்டி வைத்து அடித்துக் கொன்றனர். இந்த சம்பவம் பமிதா காவல் நிலையத்திற்கு உட்பட்ட கைர் ரதியன் கிராமத்தில் நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பெண்கள் உட்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

August 24, 2025 11:49 AM IST

Read More

Previous Post

மட்டக்களப்பில் நகை திருட்டில் சிக்கிய 18 வயது இளைஞர்

Next Post

மறக்க முடியாத நாள்: இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் பொன்னான தினம்! | unforgettable day team india test cricket golden memory

Next Post
மறக்க முடியாத நாள்: இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் பொன்னான தினம்! | unforgettable day team india test cricket golden memory

மறக்க முடியாத நாள்: இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் பொன்னான தினம்! | unforgettable day team india test cricket golden memory

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin