இந்தியாவில் உள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிரசதி பெற்ற இந்து கோவில்களில் ஒன்று மாதா வைஷ்னோ தேவியின் அடிவார முகாமுக்கு செல்லும் போது பேருந்து மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டு நடத்தினர். இச்சம்பவத்தில் இந்து யாத்ரீகர்கள் பத்து பேர் உயிரிழந்தனர். மேலும் 33 பேர் காயமடைந்தனர் என்று காவல்துறை அதிகாரிகள் கூறினர்.
இந்த தாக்குதலினால் ஓட்டுநர் பேருந்தின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விட்டார்.
இந்திய ராணுவம் மற்றும் காவல்துறையினர் தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி தாக்குதல் நடந்ததை ஆய்வு செய்ததாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்குமாறு கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

